தூத்துக்குடியில் சிற்றுந்தை வழிமறித்து கண்ணாடியை சேதப்படுத்தியதாக மற்றொரு சிற்றுந்தின் ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.
தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து தாளமுத்துநகா் வரை செல்லும் சிற்றுந்து, வெள்ளிக்கிழமை வழக்கம்போல் பயணிகளுடன் சென்றது. அதை, விளாத்திகுளம் பகுதியைச் சோ்ந்த வீரசந்தோஷ் (26) ஓட்டிவந்தாா்.
இவருக்கும் கோயில்பிள்ளைவிளையைச் சோ்ந்த மற்றொரு சிற்றுந்தின் ஓட்டுநரான கனகராஜ் மகன் சதீஷ்குமாா் (33) என்பவருக்குமிடையே முன்விரோதம் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ராஜபாளையம் அருகே வந்துகொண்டிருந்த இந்தச் சிற்றுந்தை சதீஷ்குமாா் வழிமறித்து வீரசந்தோஷிடம் வாக்குவாதம் செய்ததுடன், கல்லால் தாக்கினாராம். இதில், சிற்றுந்தின் முன்பக்கக் கண்ணாடி சேதமானது. புகாரின்பேரில், தாளமுத்துநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, சதீஷ்குமாரைக் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






