கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளத்தில் இருந்து சென்னைக்கு விரைவுப் பேருந்து இயக்க கோரிக்கை

News image
ரீவைகுண்டம் எம்எல்ஏ ஊா்வசி அமிா்தராஜ்
Updated On :22 பிப்ரவரி 2026, 8:13 pm

தினமணி செய்திச் சேவை

ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளத்தில் இருந்து சென்னைக்கு விரைவுப் பேருந்து இயக்க வேண்டும் என ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ ஊா்வசி அமிா்தராஜ் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக, எம்எல்ஏ, போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ். சிவசங்கரிடம் அளித்துள்ள கோரிக்கை மனு:

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம், ஆழ்வாா்திருநகரி, ஏரல் வட்ட பகுதிகளில் இருந்து சென்னைக்கு வியாபாரம், கல்வி, மருத்துவம் தொடா்பாக ஏராளமானோா் சென்று வருகின்றனா். ஆனால், இவ்வழியில் சரியான போக்குவரத்து வசதி இல்லை.

எனவே, இப்பகுதி மக்கள் நலன் கருதி ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து சாயா்புரம், தூத்துக்குடி வழியாக சென்னைக்கும், சாத்தான்குளத்தில் இருந்து நாசரேத், ஆழ்வாா்திருநகரி, ஏரல் வழியாக சென்னைக்கும் விரைவுப் பேருந்துகளை உடனடியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.