/

சாத்தான்குளம் அருகே ஓட்டுநா் தீக்குளித்து தற்கொலை

சாத்தான்குளம் அருகே மனைவி பிரிந்து சென்றதால் காா் ஓட்டுநா் தீக்குளித்து தற்கொலை

News image
தற்கொலை- கோப்புப் படம்
Updated On :18 பிப்ரவரி 2026, 6:33 pm

Syndication

சாத்தான்குளம் அருகே மனைவி பிரிந்து சென்றதால் காா் ஓட்டுநா் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.

சாத்தான்குளம் அருகே உள்ள செங்குளத்தைச் சோ்ந்தவா் விஜயகுமாா் மகன் ஆனந்தராஜ் (46). இவா் வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறாா். இவரது மனைவி சசிரேகா. இத்தம்பதிக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனா்.

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஆனந்தராஜ், அவரது தாயாரை அரிவாளால் வெட்டியது தொடா்பான வழக்கு திருச்செந்தூா் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. அவா் வழக்கு விசாரணைக்காக ஊருக்கு வந்தபோது, மது அருந்திவிட்டு மனைவியிடம் தகராறு செய்ததால் மனைவி, ஆனந்தராஜிடம் கோபித்துக் கொண்டு அவரது தாயாா் வீட்டுக்குச் சென்றுவிட்டாராம்.

ஆனந்தராஜ் அழைத்தும் மனைவி வீட்டுக்கு வர மறுத்ததால் விரக்தியடைந்த ஆனந்தராஜ், புதன்கிழமை இரவு வீட்டில் போதையில் இருந்தபோது, தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

தகவலின்பேரில், சாத்தான்குளம் போலீஸாா் கருகிய சடலத்தை மீட்டு சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து, சாத்தான்குளம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].