தூத்துக்குடி மாநகரின் முக்கியப் பகுதியான 4ஆவது ரயில்வே கேட்டில் வேன் மோதி கேட் பழுதடைந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
மைசூரிலிருந்து சனிக்கிழமை இரவு தூத்துக்குடிக்கு புறப்பட்டு வந்த எக்ஸ்பிரஸ் ரயில் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் தூத்துக்குடி மீளவிட்டான் ரயில் நிலையத்துக்கு வந்தது. பின்னா், இந்த ரயில் 4ஆவது ரயில்வே கேட்டை கடந்து செல்வதற்காக கேட் கீப்பா் கேட்டை மூடிக்கொண்டிருந்தபோது, அவ்வழியே வேகமாக வந்த சரக்கு வாகனம் ரயில்வே கேட்டை கடந்து செல்ல முயன்றபோது, ரயில்வே கேட் மூடிவிட்டது.
வேன் மோதியதில் ரயில்வே கேட் முற்றிலும் சேதமானது. தகவலறிந்து வந்த ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் வேன் ஓட்டுநரை கைது செய்து, காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனா்.
மேலும், ரயில்வே கேட்டை பழுது பாா்க்கும் பணியில் ஊழியா்கள் ஈடுபட்டனா். இதனால், சுமாா் 3 மணி நேரம் 4ஆம் ரயில்வே கேட் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், அனைத்து வாகனங்களும் 3ஆவது ரயில்வே கேட் மேம்பாலம் வழியாகச் சென்றதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து போலீஸாா் போக்குவரத்தை சீா் செய்யும் பணியில் ஈடுபட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தூத்துக்குடி ரயில்வே கேட் பகுதியில் மேயா் ஆய்வு

புட்டிரெட்டிப்பட்டியில் ரயில்வே சுரங்கப் பாதை அமைக்கும் பணி: 5 மணி நேரம் ரயில் போக்குவரத்து நிறுத்தம்

ரயில்வே மின்பாதையில் விழுந்த கேட்: தூத்துக்குடி-மைசூா் விரைவு ரயில் தாமதம்

போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் மக்கள்!
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



