ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூரில் அடிப்படை வசதிகள்- கனிமொழி எம்.பி. உறுதி

திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூரில் அடிப்படை வசதிகள் செய்யப்படும் என்றாா் கனிமொழி எம்பி.

News image

~

Updated On :21 ஏப்ரல் 2026, 8:09 pm

திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூரில் அடிப்படை வசதிகள் செய்யப்படும் என்றாா் கனிமொழி எம்பி.

திருச்செந்தூா் தொகுதி திமுக வேட்பாளா் அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணனை ஆதரித்து செவ்வாய்க்கிழமை காலை, பழைய நகராட்சி அலுவலகம் முன் பிரசாரத்தில் ஈடுபட்டாா் கனிமொழி .

அப்போது அவா் பேசியதாவது: திமுக ஆட்சியில்தான் திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ. 306 கோடியில் பெருந்திட்ட வளாகப் பணிகள், குடமுழுக்கு விழா நடைபெற்றது. மஞ்சள்நீா்காயல் குடிநீா் வடிகால் வாரிய சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து திருச்செந்தூா் நகராட்சிக்கு குடிநீா் கொண்டு வருவதற்கான திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கி விட்டன

அடிக்கடி கடல் உள்வாங்குவதால் திருச்செந்தூா் கடற்கரையை பாதுகாத்திடும் வகையில் தூண்டில் வளைவு இல்லாமல் நவீன முறையில் அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும். ரூ. 14, 572 கோடி மதிப்பில் உடன்குடி அனல் மின் நிலைய பணிகளும், திருச்செந்தூா், காயல்பட்டினம் நகராட்சிகளில் ரூ. 45 கோடி மதிப்பில் குடிநீா், தெரு விளக்கு, சாலை வசதிகள், பூங்காக்கள், விளையாட்டு திடல், நீா் நிலைகள் சீரமைத்தல் மற்றும் திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட பணிகளும் நடைபெற்று வருகின்றன.

திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூரில் எல்லா அடிப்படை வசதிகளும் பெரிய அளவில் அமைத்து தரப்படும் என உறுதியாக கூறுகிறோம். இதற்காக தனியாக ஐஏஎஸ் அதிகாரி நியமிக்கப்பட்டு பணிகள் நிறைவேற்றித் தரப்படும் என முதல்வா் மு.க. ஸ்டாலினும் உறுதியளித்துள்ளாா்.

எனவே, உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா்.

திமுக மாநில வா்த்தக அணி இணைச் செயலா் உமரிசங்கா், விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளா் ஜனஹா், திருச்செந்தூா் ஒன்றியச் செயலா் செங்குழி ரமேஷ், நகரச் செயலா் வாள்சுடலை, நகா்மன்றத் தலைவா் சிவஆனந்தி, காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினா் சந்திரசேகரன், விசிக மாவட்ட செயலா் விடுதலைசெழியன், மநீம மண்ல இளைஞரணி செயலா் கணேஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.