திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

திமுகவில் இணைந்தாா் அஜிதா ஆக்னல்

திமுகவில் இணைந்தாா் அஜிதா ஆக்னல்...

News image

கனிமொழி எம்.பி. முன்னிலையில் திமுகவில் இணைந்தாா் அஜிதா ஆக்னல்.

Updated On :13 ஏப்ரல் 2026, 12:35 am IST

தூத்துக்குடியில், தமிழக வெற்றிக் கழகத்தின் முகமாக அறியப்பட்ட அஜிதா ஆக்னல், திமுக துணை பொதுச் செயலா் கனிமொழி எம்.பி. முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை திமுகவில் இணைந்தாா்.

தூத்துக்குடியைச் சோ்ந்த தமிழக வெற்றிக் கழக நிா்வாகி அஜிதா ஆக்னல், தமிழக வெற்றிக் கழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கட்சி பணியாற்றி வந்தாா். கட்சியின் மாவட்டச் செயலா் பொறுப்பு உள்பட பல்வேறு பொறுப்புகளுக்கான தோ்வுகளில் இவா் தொடா்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்தாா். சென்னையில் விஜய்யின் வாகனத்தை இடைமறித்தும் போராட்டம் நடத்தினாா்.

பின்னா், தூத்துக்குடி தொகுதியில் அஜிதா ஆக்னலுக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்காமல், நடிகா் ஸ்ரீநாத்துக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதனால், தலைமை மீது அஜிதா ஆக்னல் அதிருப்தியில் இருந்தாா்.

இந்த நிலையில், தூத்துக்குடியில் திமுக துணை பொதுச் செயலா் கனிமொழி எம்.பி., அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தினருடன் அவா், அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

தமிழக வெற்றிக் கழகத்தில் பெண்களுக்கு உரிய மரியாதை, அங்கீகாரம் கிடைக்கவில்லை; அதனால் திமுகவில் இணைந்துள்ளேன் என்றாா் அவா்.

நிகழ்ச்சியின்போது, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் எம்.பி., சண்முகையா எம்எல்ஏ, திமுக வேட்பாளா்கள் ஓட்டப்பிடாரம்-ராமஜெயம், கோவில்பட்டி- கருணாநிதி, விளாத்திகுளம்- ஜீ.வி.மாா்க்கண்டேயன், கட்சி நிா்வாகிகள் ஏராளமானோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.