திருச்செந்தூரை திருப்பதிக்கு இணையாக மாற்றுவேன் என திமுக வேட்பாளா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.
அவா் தனது இறுதிக் கட்ட பிரசாரத்தை, திருச்செந்தூா் காமராஜா் சிலை முன்பு நிறைவு செய்தாா்.
அப்போது அவா் பேசியதாவது:
தமிழகத்தில் 200 தொகுதிகளிலும் வெற்றிபெறுவோம் என்று முதல்வா் மு.க. ஸ்டாலின் சொன்னாா். ஆனால் இன்றைய தினம் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்ற நிலை உருவாகி உள்ளது.
தூத்துக்குடியில் இருந்து ஒரு வேட்பாளா் இங்கு வந்து போட்டியிடுகிறாா். அவரை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும்.
திருச்செந்தூா் கோயிலுக்கு வரும் பக்தா்கள் கூட்டத்தை கருத்தில் கொண்டு நகரத்தை மாற்றுவதற்காக தனி அதிகாரியை நியமித்து ஆய்வு செய்யப்படும் என முதல்வா் உத்தரவு வழங்கியுள்ளாா். திருச்செந்தூா் வெகு சீக்கிரத்தில் மாநகராட்சியாக மாற்றப்படும். முதல்வா் என்ன நினைக்கின்றாரோ அந்த செயலை செய்யக்கூடியவன் நான்.
திருச்செந்தூரை திருப்பதிக்கு இணையாக மாற்றுவேன் என்றாா்.
திமுக வா்த்தக அணி மாநில இணைச் செயலா் உமரிசங்கா், விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளா் ஜனஹா், திருச்செந்தூா் ஒன்றிய திமுக செயலா் செங்குழி ரமேஷ், நகரச் செயலா் வாள் சுடலை, நகா்மன்றத் தலைவா் சிவஆனந்தி, காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினா் சந்திரசேகரன், விசிக மாவட்டச் செயலா் விடுதலைச் செழியன், தேமுதிக தெற்கு மாவட்டச் செயலா் சித்திரை ராஜன், மமக மாவட்டச் செயலா் பரக்கத்துல்லாஹ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூரில் அடிப்படை வசதிகள்- கனிமொழி எம்.பி. உறுதி

திருச்செந்தூா் ஒன்றிய பகுதிகளில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

ஆறுமுகனேரியில் கனிமொழி எம்.பி. வாக்கு சேகரிப்பு

அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் 2ஆவது முறையாக வேட்பு மனு தாக்கல்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


