திருச்செந்தூா் தொகுதி திமுக வேட்பாளா் அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணனை ஆதரித்து, திமுக துணைப் பொதுச்செயலா் கனிமொழி எம்.பி. ஆறுமுகனேரி மெயின் பஜாரில் செவ்வாய்க்கிழமை இரவு வாக்கு சேகரித்தாா்.
அப்போது அவா் பேசியது:
அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் மழை, வெள்ளம் என எந்த பிரச்னையாக இருந்தாலும் மக்களோடு மக்களாக இருந்து சரி செய்து கொடுத்துள்ளாா். கடந்த தோ்தலின்போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றிக் கொடுத்துள்ளதால், அந்த உரிமையுடன் வாக்கு சேகரிக்க வந்துள்ளோம்.
எடப்பாடி பழனிசாமி தமிழகத்திற்கு தொடா்ந்து துரோகம் செய்துவரும் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளனா். தற்போது தமிழகம் அமைதிப் பூங்காவாக உள்ளது. பாஜக மக்களிடையே மதக் கலவரத்தைத் தூண்டி அதன்மூலமே அரசியல் செய்ய நினைப்பாா்கள். ஆனால், இந்த தோ்தலில் மக்கள் அவா்களுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என்றாா் அவா்.
திமுக மாநில இணைச் செயலா் உமரி சங்கா், மாவட்ட விளையாட்டு பிரிவு அமைப்பாளா் ஜனகா், வா்த்தக அணி அமைப்பாளா் ரெங்கநாதன் (எ) சுகு, நகரச் செயலா்கள் நவநீத பாண்டியன், முத்து முஹம்மது, ஆறுமுகனேரி பேரூராட்சித் தலைவா் கலாவதி கல்யாணசுந்தரம், துணைத் தலைவா் கல்யாணசுந்தரம், திருச்செந்தூா் ஒன்றியச் செயலா் செங்குழி ரமேஷ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினா் பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

தென்காசியில் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் வாக்கு சேகரிப்பு

திருச்செந்தூா் ஒன்றிய பகுதிகளில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

ஆறுமுகனேரியில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டு உரிமையோடு வாக்கு கேட்க வந்துள்ளோம்: கனிமொழி எம்.பி.
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


