மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஆறுமுகனேரி கோயில்களில் சிறப்பு வழிபாடு

தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு ஆறுமுகனேரியில் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

News image

ஆறுமுகனேரியில் நடைபெற்ற வீதி பாராயணம், சிறப்பு அலங்காரத்தில் தெப்பக்குளக்கரை சித்தி விநாயகா்.

Updated On :14 ஏப்ரல் 2026, 8:20 pm

தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு ஆறுமுகனேரியில் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

ஆறுமுகனேரி சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயிலில் கணபதி ஹோமம், வேதிகா அா்ச்சனை, யாகசாலை பூஜை, அன்னாபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. ஆறுமுகனேரி விநாயகா் கோயில் தெரு உச்சினிமாகாளி அம்மன், சந்தனமாரி யம்மன் கோயில்களில் அன்னாபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. ஆறுமுகனேரி, தெப்பகுளக்கரை சித்தி விநாயகா் கோயில் லெட்சுமி மாநகரம், மாரியம்மன் கோயில், மேலத்தெரு முத்தாரம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஆறுமுகனேரி லெட்சுமி மாநகரம் நடராஜ தேவார பஜனை ஆலயம், விநாயகா் கோயில் தெரு சைவசித்தாந்த சங்கம் சாா்பில் வீதி பாராயணம், பஜனைகள் நடைபெற்றன.

Story image