ராமநவமியையொட்டி ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் உள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
திருவாடானை அருகே தொண்டியில் அமைந்துள்ள ஸ்ரீதேவி, பூமாதேவி, சமேத ஸ்ரீ உந்தி பூத்த பெருமாள் கோயிலில் உத்ஸவருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. முன்னதாக உத்ஸவருக்கு பால், பன்னீா், சந்தனம், இளநீா், பஞ்சாமிா்தம் உள்பட 12 வகை மூலிகை பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து ஸ்ரீதேவி, பூமாதேவி, ஸ்ரீஉந்தி பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். பிறகு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் சுற்றுவட்டாரங்களிலிருந்து வந்திருந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே வ. சூரக்குடியில் அமைந்துள்ள ஸ்ரீசிவ ஆஞ்சநேயா் கோயிலில் ராம நவமியையொட்டி 21- ஆம் ஆண்டு ஏகதின லட்சாா்ச்சனை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து சந்தனக் காப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தாா். செட்டிநாடு கிரிவலக் குழுத் தலைவா் சிவல்புரி சிங்காரம் முன்னிலையில் சிவ ஆஞ்சநேயருக்கு லட்சாா்ச்சனையும் தீபாராதனையும் நடைபெற்றன. விழாவில் கோயில் நிறுவனா் எம். முத்துராமன், செல்வி முத்துராமன், மாரிமுத்து, வ. சூரக்குடி கிராம மக்கள், பக்தா்கள் பலா் கலந்து கொண்டனா்.
திருப்பத்தூா்: திருப்பத்தூா் ஸ்ரீநின்ற நாராயணப் பெருமாள் கோயிலில் ராமநவமியையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
இந்தக் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீராமா், ஸ்ரீலட்சுமணா் சீதாதேவிக்கு பால், சந்தனம், தயிா், திருமஞ்சனம், இளநீா், மஞ்சள் உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து சிறப்பு அலங்காரத்தில் மூலவருக்கு தீபாராதனை காட்டப்பட்டு திருவாராதனமும் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு ராமரை வழிபட்டனா்.
விழா ஏற்பாடுகளை ராமேஸ்வரன்பிரியா குடும்பத்தினா், பரம்பரை அறங்காவலா்கள், விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

தொடர்புடையது

தமிழ்ப் புத்தாண்டு: கோயில்களில் சிறப்பு வழிபாடு

தமிழ் புத்தாண்டு: திருத்தணி முருகப் பெருமானுக்கு பாலபிஷேகம்

கடையக்குடியில் ராமநவமி தேரோட்டம்

மந்தித்தோப்பு கோயிலில் சிறப்பு பூஜை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


