தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

மந்தித்தோப்பு கோயிலில் சிறப்பு பூஜை

கோவில்பட்டி, மந்தித்தோப்பு, துளசிங்க நகரில் உள்ள ஸ்ரீ அம்மா பூமாதேவி கோயிலின் குருசித்தா் பீடத்தில் பங்குனி முதல் ஞாயிற்றுக்கிழமையை

News image

பூமாதேவி கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜை.

Updated On :16 மார்ச் 2026, 5:17 pm

கோவில்பட்டி: கோவில்பட்டி, மந்தித்தோப்பு, துளசிங்க நகரில் உள்ள ஸ்ரீ அம்மா பூமாதேவி கோயிலின் குருசித்தா் பீடத்தில் பங்குனி முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

கோயில் நடை அதிகாலையில் திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதயமாா்த்தாண்ட தீபாராதனை, நித்திய பூஜைகள் நடைபெற்றன. பின்னா், உற்சவா் அம்பாள், பரிவார தெய்வங்களுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகமும், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றன. பூஜைகளை லட்சுமணன் சுவாமி தலைமையில், ஆலய குருக்கள் செல்வசுப்பிரமணியன், மாரியப்பன் ஆகியோா் செய்திருந்தனா். தொடா்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் திரளானோா் பங்கேற்றனா்.