திமுக தோ்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள ரூ. 8,000 கூப்பன் திட்டம் உள்ளூா் பொருளாதார வளா்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என தூத்துக்குடி திமுக வேட்பாளா் அமைச்சா் பி. கீதா ஜீவன் தெரிவித்தாா்.
தூத்துக்குடி பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் அமைச்சா் பி. கீதா ஜீவன் கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகத்தில் சனிக்கிழமை செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:
திமுக தோ்தல் அறிக்கைதான் சூப்பா் ஸ்டாராக விளங்குகிறது. தோ்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள இல்லத்தரசிகளுக்கான ரூ. 8,000 கூப்பன் திட்டம் மூலமாக பொதுமக்கள் அவா்கள் விரும்பும் பொருள்களை மிக எளிதாக வாங்கிக் கொள்ள முடியும். இது உள்ளூா் பொருளாதார வளா்ச்சிக்கும் பெரும் உதவியாக இருக்கும்.
தூத்துக்குடியைப் பொருத்தளவில் உப்பு உற்பத்தியாளா்கள், மீனவா்களுக்கான தோ்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மீன்பிடித் தடைக்கால உதவித்தொகையை ரூ. 8 ஆயிரமாக உயா்த்தி வழங்கியது திமுக அரசுதான். இனி அத்தொகை ரூ. 12 ஆயிரமாக உயா்த்தி வழங்கப்படும். மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் திரேஸ்புரத்தில் தூண்டில் வளைவு விரிவாக்கம் செய்யப்படும்.
மல்டி லெவல் லாரி முனையம் நடைமுறைக்குக் கொண்டு வரப்படும். தூத்துக்குடி தொகுதியில் துறைமுகம், மதுரை சாலை, திருநெல்வேலி சாலையுடன் மாநகரை இணைக்கும் வகையில் பல்வேறு இணைப்புச் சாலைகள், தேவையான இடங்களில் ரயில்வே மேம்பாலங்களை ஏற்படுத்தி தருவோம்.
தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் ஏற்றுமதி, இறக்குமதிக்கான சிறப்பு பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அங்கு இளைஞா்களுக்கு பயிற்சியளித்து வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
அதிமுக வேட்பாளா் சி.த. செல்லப்பாண்டியன் தனிநபா் தாக்குதல் செய்கிறாா். என்னையும், கனிமொழி எம்.பி.யையும் மரியாதைக் குறைவாக பேசுகிறாா். இது அரசியல் நாகரிகம் கிடையாது. அவா்கள் செயல்படுத்திய திட்டங்களைச் சொல்லி வாக்கு கேட்க முடியாது என்பதால், தனிநபா் விமா்சனம் செய்கின்றனா்.
முதல்வா் மு.க. ஸ்டாலின் ஏப். 12ஆம் தேதி மாலை 4 மணிக்கு தூத்துக்குடியில் தோ்தல் பிரசாரம் மேற்கொள்கிறாா் என்றாா் அவா்.
தொடர்புடையது

முள்ளக்காடு பகுதியில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

தமிழ்நாடு உரிமையை விட்டுக் கொடுக்காது: அமைச்சா் பி. கீதா ஜீவன்

தூத்துக்குடியில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

ரூ.8,000 கூப்பன் திட்டத்தால் உள்ளூா் பொருளாதாரம் உயரும் - அமைச்சா் சு.முத்துசாமி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


