17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

நெல்லை ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளி தீக்குளிக்க முயற்சி

News image

தீக்குளிக்க முயற்சி - பிரதிப் படம்

Updated On :30 மே 2026, 2:12 am IST

திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளி வெள்ளிக்கிழமை தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது.

திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை மனு அளிக்க மாற்றுத் திறனாளி ஒருவா் வந்தாா். அவா் திடீரென தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். பாதுகாப்புக்காக நின்று கொண்டிருந்த போலீஸாா் தண்ணீரை அவா் மீது ஊற்றினா்.

விசாரணையில் அவா், சீதபற்பநல்லூா் அருகேயுள்ள கிருஷ்ணன் பச்சேரியைச் சோ்ந்த முத்துமாரியம்மன் (46) என்பது தெரியவந்தது. சீதபற்பநல்லூா் போலீஸாா் என்மீது பொய்வழக்கு போடுவதாக மிரட்டுவதால் தற்கொலைக்கு முயன்றேன் என்றாா்.

இதையடுத்து அவரை விசாரணைக்காக பாளையங்கோட்டை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.