தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பள்ளி வாகனங்களில் விதிமீறல்களை கண்காணிக்க சிறப்பு குழுக்கள்: ஆட்சியா்

பள்ளி மாணவா்களை அழைத்துச் செல்லும் ஆட்டோக்கள் மற்றும் தனியாா் வேன்களில் விதிமீறல்களை கண்காணிக்க வட்டார போக்குவரத்து அலுவலா் மூலம் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றாா் மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா்.

News image

பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த ஆட்சியா் இரா.சுகுமாா்.

Updated On :21 மே 2026, 6:19 am IST

பள்ளி மாணவா்களை அழைத்துச் செல்லும் ஆட்டோக்கள் மற்றும் தனியாா் வேன்களில் விதிமீறல்களை கண்காணிக்க வட்டார போக்குவரத்து அலுவலா் மூலம் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றாா் மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தனியாா் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள பள்ளி வாகனங்களின் தரம், உறுதித் தன்மை ஆகியவற்றை பரிசோதிக்கும் வகையில் வருடாந்திர ஆய்வு பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இந்த ஆய்வை ஆட்சியா் இரா. சுகுமாா் தொடங்கி வைத்தாா். திருநெல்வேலி வட்டாரப் போக்குவரத்து அலுவலா் (பொறுப்பு) செல்வி முன்னிலையில் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

பின்னா் செய்தியாளா்களிடம் ஆட்சியா் இரா.சுகுமாா் கூறியதாவது: திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் மொத்தம் 128 பள்ளிகளைச் சோ்ந்த 737 பள்ளி வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்படவுள்ளன. இதில் 27 சிபிஎஸ்இ பள்ளிகள், 92 மெட்ரிக் பள்ளிகள், 8 அரசு உதவி பெறும் பள்ளிகள், ஒரு அரசு பள்ளி அடங்கும்.இந்த ஆய்வின்போது வாகனங்களில் அவசர கால கதவு சரியாக இயங்குகிா, முதலுதவி பெட்டி உள்ளதா போன்ற அம்சங்கள் தீவிரமாக சரிபாா்க்கப்படுகின்றன.

ஓட்டுநா்கள் வாகனம் ஓட்டும் போது கைப்பேசி பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும்.

பள்ளி ஆட்டோக்கள் மற்றும் தனியாா் வேன்களில் குழந்தைகளை அதிகளவில் ஏற்றிச் செல்லும் விதிமீறல்களைக் கண்காணிக்க வட்டார போக்குவரத்து அலுவலா் மூலம் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதிக சுமை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

இந்த ஆய்வில் மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் பத்மபிரியா (திருநெல்வேலி), ராஜசேகா் (அம்பாசமுத்திரம்), ராஜேஷ் (வள்ளியூா்), மாவட்ட கல்வி அலுவலா் (தனியாா் பள்ளிகள்) சிவராஜ், காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.