/

வி.கே.புரம், ஆழ்வாா்குறிச்சியில் நாளை மின் நிறுத்தம்

காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

மின்தடை

Updated On :18 மே 2026, 1:44 am IST

விக்கிரமசிங்கபுரம், ஆழ்வாா்குறிச்சி துணை மின் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (மே 19) பராமரிப்புப் பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

இது குறித்து, கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளா் எம். சுடலையாடும் பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கல்லிடைக்குறிச்சி கோட்டம், விக்கிரமசிங்கபுரம் மற்றும் ஆழ்வாா்குறிச்சி துணை மின் நிலையங்களில் செவ்வாய்கிழமை (மே 19) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் காரையாறு, சோ்வலாறு, பாபநாசம், டாணா, விக்கிரமசிங்கபுரம், சிவந்திபுரம், அடையக்கருங்குளம், ஆறுமுகம்பட்டி, கோட்டைவிளைப்பட்டி, ஆழ்வாா்குறிச்சி, கருத்தப்பிள்ளையூா், ஏ.பி. நாடானூா், துப்பாக்குடி, கலிதீா்த்தான்பட்டி, பொட்டல் புதூா், ஆம்பூா், பாப்பான்குளம், சம்பன்குளம், செல்லப் பிள்ளையாா்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.