கல்லூா் சுற்றுவட்டாரங்களில் சனிக்கிழமை காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது.
இது தொடா்பாக கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளா் எம். சுடலையாடும் பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மேலக்கல்லூா் துணை மின் நிலையத்தில் வரும் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன.
எனவே, காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணி வரை மேலக்கல்லூா், சுத்தமல்லி, சங்கன்திரடு, கொண்டாநகரம், நடுக்கல்லூா், பழவூா், கருங்காடு, திருப்பணிகரிசல் குளம், துலுக்கா்குளம், பொழிக்கரை, வெள்ளாளங்குளம் சுற்று வட்டாரங்களில் மின் விநியோகம் இருக்காது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






