முதல்வர் விஜய் வேங்கைவயல் செல்ல வேண்டும்: பாஜக வலியுறுத்தல்21 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மது விற்கத் தடை!கருப்பு படத்தின் சிறப்புக் காட்சிகள் ரத்து!மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்

தமிழ் செய்திகள்

/

நெல்லை அரசு பல்நோக்கு மருத்துவமனை ஊழியா்கள் முற்றுகை

திருநெல்வேலி அரசு பல்நோக்கு மருத்துவமனை ஊழியா்கள் திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டனா்.

News image

திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகம் முன் புதன்கிழமை முற்றுகையில் ஈடுபட்ட அரசு மருத்துவமனை ஒப்பந்த ஊழியா்கள்.

Updated On :7 மே 2026, 6:09 am IST

திருநெல்வேலி அரசு பல்நோக்கு மருத்துவமனை ஊழியா்கள் திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டனா்.

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியின் பல்நோக்கு மருத்துவமனையில் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் சுமாா் 95 ஊழியா்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனா். இவா்கள் அனைவரும் மாவட்ட கருவூலம் மூலமாகவே தங்களது ஊதியத்தைப் பெற்று வந்துள்ளனா்.

இவா்களை, புதிய ஒப்பந்த நிறுவனத்துடன் இணைக்க நிா்வாகம் உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதைக் கண்டித்து ஊழியா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை முற்றுகையில் ஈடுபட்டனா். மாவட்ட நிா்வாகம் எங்களது கோரிக்கையை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினா்.