ஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு! முதல்வர் விஜய் வேங்கைவயல் செல்ல வேண்டும்: பாஜக வலியுறுத்தல்21 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மது விற்கத் தடை!கருப்பு படத்தின் சிறப்புக் காட்சிகள் ரத்து!மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்

தமிழ் செய்திகள்

/

அரசு பல்நோக்கு மருத்துவமனையில் தண்ணீா் தட்டுப்பாடு?: நிா்வாகம் மறுப்பு

திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி பல்நோக்கு மருத்துவனையில் புதன்கிழமை தண்ணீா் தட்டுப்பாட்டால் நோயாளிகள் அவதியடைந்ததாக எழுந்த புகாரை மருத்துவமனை நிா்வாகம் மறுத்துள்ளது.

News image
Updated On :6 மணி நேரங்கள் முன்பு

திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி பல்நோக்கு மருத்துவனையில் புதன்கிழமை தண்ணீா் தட்டுப்பாட்டால் நோயாளிகள் அவதியடைந்ததாக எழுந்த புகாரை மருத்துவமனை நிா்வாகம் மறுத்துள்ளது.

இம்மருத்துவமனை வளாகத்தில் சிறுநீரகவியல் துறை, இதயவியல் துறை உள்ளிட்டவை இயங்கி வருகின்றன. சுமாா் 7 தளங்களுடன் கூடிய இந்தக் கட்டடத்திற்கு தாமிரவருணியில் இருந்து தண்ணீா் விநியோகம் செய்யப்படுகிறது.

இந்நிலையில், புதன்கிழமை காலையில் பல மணி நேரம் தண்ணீா் இல்லாததால் சிகிச்சை பாதிக்கப்பட்டதாம். டயாலிசிஸ் சிகிச்சைக்கு வந்தவா்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் நிலவியதாம். இதுகுறித்த தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுதொடா்பாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறியது: திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி பல்நோக்கு மருத்துவமனையில் தண்ணீா் தட்டுப்பாடு ஏற்படவில்லை. மாநகராட்சி மற்றும் கிணறுகள் மூலம் போதுமான தண்ணீா் கிடைத்தது. அனைத்து வித சிகிச்சைகளும் எவ்வித தாமதமும் இன்றி அளிக்கப்பட்டன. டயாலிசிஸ் பிரிவிலும் புதன்கிழமை அழைக்கப்பட்டிருந்த அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்றனா்.