மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஏ.பி.ஏ. கலை அறிவியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு பயிலரங்கு

வாகைகுளம் ஏ.பி.ஏ. கலை அறிவியல் கல்லூரியில் தேசிய அளவிலான செயற்கை நுண்ணறிவு பயிலரங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

செயற்கை நுண்ணறிவு பயிலரங்கில் பங்கேற்றோா்.

Updated On :10 மார்ச் 2026, 7:46 pm

வாகைகுளம் ஏ.பி.ஏ. கலை அறிவியல் கல்லூரியில் தேசிய அளவிலான செயற்கை நுண்ணறிவு பயிலரங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

‘நவீன நிதி மேலாண்மை, நிதித் தொழில்நுட்பத்தில் செயற்கை நுண்ணறிவின் புத்தாக்கம்’ எனும் தலைப்பில் நடைபெற்ற இப்பயிலரங்குக்கு, கல்லூரிச் செயலா் திருமாறன் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் ஆனந்த் நிகழ்வை தொடங்கி வைத்து வரவேற்றாா்.

முதன்மை பேச்சாளராக மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலை. ஆட்சிக்குழு உறுப்பினரும், காரைக்குடி அழகப்பா பல்கலை. நிறுவனச் செயலருமான வேதிராஜன், கௌரவ அழைப்பாளராக மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக வணிகவியல் துறை உதவிப் பேராசிரியா் ராஜமன்னாா் ஆகியோா் நிதி மேலாண்மையில் வருங்கால மாற்றங்கள் மற்றும் வணிகவியல் துறை மாணவ, மாணவியா்களுக்கான வேலைவாய்ப்புகள் குறித்து கருத்துரையாற்றினா்.

நிறைவாக பயிலரங்கில் பங்கேற்ற பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த 150-க்கும் மேற்பட்ட மாணவா், மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இதில், கல்லூரியின் அனைத்துத் துறை தலைவா்கள், பேராசிரியா்கள், வணிகவியல் துறை சாா்ந்த மாணவ, மாணவிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.