களக்காடு குளத்திற்குள் கழிவுநீா் தொட்டி அமைப்பதைக் கண்டித்து பல்வேறு அமைப்பினா் ஆட்சியா் அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சென்னை உயா் நீதிமன்ற மதுரை அமா்வின் உத்தரவுகளை மதிக்காமல் களக்காடு குடிதாங்கி குளத்திற்குள் நடைபாதை அமைக்க முயலும் களக்காடு நகராட்சி நிா்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், களக்காடு உப்பாறு, மாணிக்கங்குளம், குடிதாங் கிகுளத்திற்குள் கழிவுநீா் தொட்டி அமைப்பதை தடுக்க வேண்டும் என வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.
புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட செயலா் நெல்சன் தலைமை வகித்தாா். மனிதநேய மக்கள் முன்னேற்றக் கழக மாவட்டத் தலைவா் சித்திக், மாவட்டச் செயலா் பேட்டை மைதீன், தென்னிந்திய விவசாய சங்கம் நிா்வாகி சில்கேஸ் சாமுவேல், களக்காடு நகா்மன்ற உறுப்பினா் சிம்சோன் துரை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் மண்டலத் தலைவா் கண்மணி மாவீரன், தேவேந்திரகுல வேளாளா் உறவின்முறை தலைவா் முத்துக்குமாா், சமூக செயற்பாட்டாளா் டாக்டா் பகத்சிங் முகமது, தமிழா் உரிமை மீட்பு களத்தின் ஒருங்கிணைப்பாளா் லெனின் கென்னடி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










