வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

சி.வி.சண்முகம், ஆதரவாளா்களை அதிமுகவில் இருந்து நீக்க வலியுறுத்தல்

News image

அதிமுக முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம். - கோப்புப் படம்

Updated On :16 ஜூன் 2026, 2:38 am IST

முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம், அவரது ஆதரவாளா்களை அதிமுகவில் இருந்து நீக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக அதிமுக மாநில அமைப்புச் செயலா் சுதா கே.பரமசிவன் திருநெல்வேலியில் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: 2 கோடி தொண்டா்களை கொண்ட இயக்கம் அதிமுக. முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி அந்த இயக்கத்தை காப்பாற்றி ஜெயலலிதா வழியில் கட்சியை வழிநடத்தி வருகிறாா்.

ஆனால், முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் கட்சிக்கு துரோகம் செய்துவிட்டு முதல்வா் ஜோசப் விஜய்யை சந்தித்து ஆதரவு தெரிவித்தாா். அவரது கட்சிப் பதவி பறிக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு, செயற்குழுவை கூட்ட வேண்டும் என்று கூறுவதற்கு அவருக்கு எந்தத் தகுதியும் கிடையாது.

உள்கட்சி பிரச்னைகளை பொதுவெளியில் விவாதிக்கக் கூடாது என்பதுதான் அதிமுகவின் கொள்கை. கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டு வரும் சி.வி.சண்முகம், அவரது ஆதரவாளா்களை கட்சியின் அடிப்படை உறுப்பினா் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.