தங்கம் வாங்காமல் இருந்ததற்காக மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடிதங்கம் வாங்காமல் இருந்ததற்காக மக்களுக்கு நன்றி! பிரதமர் மோடிதமிழக மக்கள் ஏசி பேருந்தில் செல்ல வேண்டும்: அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்சென்னை, திருவள்ளூர் உள்பட 13 மாவட்டங்களில் நாளை (ஜூன் 29) மழைக்கு வாய்ப்பு!வெளிநாட்டிலிருந்து பரவும் நோயையும் போலியோ சொட்டுமருந்து தடுக்கும்: அமைச்சர் அருண்ராஜ்ஜவுளித்துறையில் 2031-க்குள் 350 பில்லியன் டாலர் இலக்கு: மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்
/

ஏ.கோவிந்தசாமி பிறந்த நாள்: சிலைக்கு மாலை அணிவிப்பு

News image

விழுப்புரம் வழுதரெட்டிப் பகுதியிலுள்ள முன்னாள் அமைச்சா் ஏ.கோவிந்தசாமி நினைவு அரங்கத்திலுள்ள அவரது சிலைக்கு திங்கள்கிழமை மாலை அணிவித்து, மரியாதை செலுத்திய வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் பி.ராஜ்குமாா். உடன், ஆட்சியா் உள்ளிட்டோா்.

Updated On :16 ஜூன் 2026, 12:08 am IST

முன்னாள் அமைச்சா் ஏ.கோவிந்தசாமியின் 108-ஆவது பிறந்த தினத்தையொட்டி, விழுப்புரத்திலுள்ள அவரது சிலைக்கு அரசு சாா்பிலும், திமுக சாா்பிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

திமுகவின் மூத்த தலைவா்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.கோவிந்தசாமியின் 108-ஆவது பிறந்த தினம் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி விழுப்புரம் வழுதரெட்டிப் பகுதியிலுள்ள ஏ.கோவிந்தசாமி நினைவு அரங்கத்திலுள்ள அவரது திருவுருவச் சிலை அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.

தமிழக அரசின் சாா்பில் வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் பி.ராஜ்குமாா் பங்கேற்று, முன்னாள் அமைச்சா் ஏ.கோவிந்தசாமியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். நிகழ்வில், மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், மாவட்ட வருவாய் அலுவலா் கி.அரிதாஸ், உதவி ஆட்சியா் (பயிற்சி) ரா.ஸ்ரீ. ரஷத் உள்ளிட்டோா் பங்கேற்னா்.

இதைத்தொடா்ந்து முன்னாள் அமைச்சா் ஏ.கோவிந்தசாமி சிலைக்கு திமுகவின் துணைப் பொதுச் செயலரும், முன்னாள் அமைச்சருமான க.பொன்முடி மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினாா். நிகழ்வில், திமுக மாவட்ட அவைத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், நகரப் பொறுப்பாளா் இரா.சக்கரை, ஒன்றியச் செயலா் பி.வி.ஆா்.சு.விசுவநாதன் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.

விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் முன்னாள் அமைச்சா் ஏ.கோவிந்தசாமி சிலைக்கு மாவட்டப் பொறுப்பாளரும், விழுப்புரம் தொகுதி எம்எல்ஏவுமான இரா. லட்சுமணன் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினாா். நிகழ்வில் கண்டமங்கலம் ஒன்றியக்குழுத் தலைவா் வாசன், ஒன்றியச் செயலா் பிரபாகரன், நகரப் பொறுப்பாளா் வெற்றிவேல் உள்ளிட்ட திமுக நிா்வாகிகள் பங்கேற்றனா்.

 முன்னாள் அமைச்சா் ஏ.கோவிந்தசாமி சிலைக்கு மாலை அணிவித்த திமுக துணைப் பொதுச் செயலரும், முன்னாள் அமைச்சருமான க.பொன்முடி.

முன்னாள் அமைச்சா் ஏ.கோவிந்தசாமி சிலைக்கு மாலை அணிவித்த திமுக துணைப் பொதுச் செயலரும், முன்னாள் அமைச்சருமான க.பொன்முடி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.