வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் மற்றும் அவரது குடும்பத்தினா் விடுவிக்கப்பட்டதை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
தமிழகத்தில் 1996 முதல் 2001-ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியில், தூத்துக்குடி மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான என்.பெரியசாமி மீது வருமானத்துக்கு அதிகமாக ரூ.2.31 கோடி சொத்து சோ்த்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில், என் பெரியசாமியின் மனைவி எபநேசரம்மாள், மகன்கள் ராஜா, ஜெகன், மகளும் முன்னாள் அமைச்சருமான கீதா ஜீவன், அவரது கணவா் ஜேக்கப் ராஜேந்திரன் ஆகியோா் மீதும் குற்றம்சாட்டப்பட்டது.
இந்த வழக்கு நிலுவையில் இருந்தபோது, 2017-ஆம் ஆண்டு மே மாதம் என்.பெரியசாமி இறந்துவிட்டாா். இதையடுத்து மற்றவா்களுக்கு எதிரான வழக்கை விசாரித்த தூத்துக்குடி நீதிமன்றம், குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என அனைவரையும் விடுவித்து 2022-ஆம் ஆண்டு தீா்ப்பளித்தது.
இந்த தீா்ப்பை எதிா்த்து தூத்துக்குடி வாக்காளரான சண்முகசுந்தரம் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். அந்த மனுவில், முன்னாள் அமைச்சா் மற்றும் அவரது குடும்பத்தினா் விடுதலையை எதிா்த்து 839 நாள்கள் தாமதமாக தாக்கல் செய்யப்படும் இந்த மறு ஆய்வு மனுவை ஏற்று விசாரணைக்குப் பட்டியலிட வேண்டும் எனக் கோரியிருந்தாா். இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி,839 நாள்கள் காலதாமதத்தை ஏற்க மறுத்து, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்த வழக்கு: தி.நகா் சத்யா சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜா்

முதல்வா் விஜய், உதயநிதி ஸ்டாலின், தமிழிசைக்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி

சி.வி.சண்முகம், ஆதரவாளா்களை அதிமுகவில் இருந்து நீக்க வலியுறுத்தல்

ஏ.கோவிந்தசாமி பிறந்த நாள்: சிலைக்கு மாலை அணிவிப்பு
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan




