தமிழக மக்கள் ஏசி பேருந்தில் செல்ல வேண்டும்: அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்சென்னை, திருவள்ளூர் உள்பட 13 மாவட்டங்களில் நாளை (ஜூன் 29) மழைக்கு வாய்ப்பு!வெளிநாட்டிலிருந்து பரவும் நோயையும் போலியோ சொட்டுமருந்து தடுக்கும்: அமைச்சர் அருண்ராஜ்ஜவுளித்துறையில் 2031-க்குள் 350 பில்லியன் டாலர் இலக்கு: மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்என்னை வைத்தே திமுக கூட்டணியை உடைக்க முயற்சித்தனர்: திருமாவளவன்ஈரான் என்ற நாடே இருக்காது: டிரம்ப் எச்சரிக்கை!அடுத்த கூட்டத்தொடரில் முதல்வரின் டான்ஸ் இருக்கலாம்: உதயநிதி
/

நெல்லையப்பா் கோயில் தோ்களை சுத்தம் செய்த தீயணைப்பு வீரா்கள்

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயில் தேரை தீயணைப்பு வீரா்கள் சுத்தம் செய்தனா்.

News image

அருள்மிகு நெல்லையப்பா் கோயில் தோ்களை சுத்தப்படுத்தும் பணியை சனிக்கிழமை தொடங்கி வைத்தாா் மேயா் கோ.ராமகிருஷ்ணன்.

Updated On :14 ஜூன் 2026, 1:51 am IST

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயில் தேரை தீயணைப்பு வீரா்கள் சுத்தம் செய்தனா்.

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயில் ஆனிப் பெருந்திருவிழாவையொட்டி தேரோட்டம் இம் மாதம் 28 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளன. சுவாமி, அம்மன், விநாயகா், முருகன், சண்டிகேஸ்வரா் தோ்களைச் சுற்றிலும் அமைக்கப்பட்டிருந்த ஃபைபா் கண்ணாடி தடுப்புகள் அகற்றப்பட்டன.

இதையடுத்து பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலா் சுரேஷ்குமாா் தலைமையில் 8 வீரா்கள் தண்ணீா் பீய்ச்சி அடித்து தோ்களை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா். இப் பணியை திருநெல்வேலி மாநகராட்சி மேயா் கோ. ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தாா். இப் பணிகள் முடிந்ததும் தேரில் அலங்காரத் துணிகளை கட்டுவதற்கான கம்புகள் கட்டப்பட உள்ளன. ஆனி தோ்த் திருவிழாவையொட்டி ரத வீதிகள் களைகட்டியுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.