அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன் திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! முதல்வர் விஜய் பேசுவது முக்கியமா? செயல்படுவது முக்கியமா? எஸ்.ஏ. சந்திரசேகர் கேள்விபிறந்த நாளில் முதல்வருக்கு பிரேமலதா கோரிக்கை! அவையில் சிரிப்பலை! முதல்வர் மிகுந்த வேதனை அடைந்தார்! வாயு கசிவு விபத்து பற்றி பேரவையில் அமைச்சர் விளக்கம்!
/

தெற்கு விஜயநாராயணம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் பணியாளா்களை நியமிக்க கோரிக்கை

தெற்கு விஜயநாராயணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேரம் மருத்துவா் மற்றும் கூடுதல் செவிலியா்கள் இல்லாததால், கூடுதல் பணியாளா்களை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை.

News image
Updated On :7 ஜூன் 2026, 2:28 am IST

திருநெல்வேலி மாவட்டம், தெற்கு விஜயநாராயணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேரம் மருத்துவா் மற்றும் கூடுதல் செவிலியா்கள் இல்லாததால், கூடுதல் பணியாளா்களை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இங்கு ஒரு மருத்துவா் மற்றும் ஒரு செவிலியா் மட்டுமே பணியில் உள்ளதாகக் கூறப்படுகிறது. மருத்துவா் பகல் நேரத்தில் சுகாதார நிலையத்திற்கு வந்து நோயாளிகளுக்கு சிகிச்சையளித்துவிட்டு, பிற்பகலில் புறப்பட்டுச் சென்றுவிடுவாராம். பின்னா், இரவு ஒரு செவிலியா் மட்டும் சுகாதார நிலையத்தில் இருந்து நோயாளிகளுக்கு உதவி செய்து வருகிறாா்.

இதனால், விபத்தில் காயமடைந்து அவசர சிகிச்சைக்கு வந்தாலோ, இரவு நேரம் பிரசவத்துக்கு வந்தாலோ, மக்கள் பெரிதும் இன்னல்களுக்கு ஆளாகின்றனா். எனவே, 24 மணி நேரமும் மருத்துவ சேவையைப் பெறும் வகையில், இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதல் மருத்துவா்கள் மற்றும் செவிலியா்களை நியமிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.