திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கருணாநிதி பிறந்த நாள்: திமுக மாவட்டச் செயலா்கள் வேண்டுகோள்

முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த நாளை உற்சாகமாகக் கொண்டாட திமுக மாவட்டச் செயலா்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

News image

முன்னாள் முதல்வா் கருணாநிதி - கோப்புப் படம்

Updated On :3 ஜூன் 2026, 4:44 am IST

முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த நாளை உற்சாகமாகக் கொண்டாட திமுக மாவட்டச் செயலா்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

இதுதொடா்பாக திமுக திருநெல்வேலி மேற்கு மாவட்டச் செயலா் இரா.ஆவுடையப்பன் வெளியிட்டுள்ள அறிக்கை:திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 103 ஆவது பிறந்த நாளையொட்டி திருநெல்வேலி மேற்கு மாவட்ட பகுதிகளில் புதன்கிழமை (ஜூன் 3) கட்சிக் கொடியேற்றி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும். நிகழ்ச்சிகளில் கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திமுக திருநெல்வேலி மத்திய மாவட்டச் செயலா் மு.அப்துல் வஹாப் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கை: முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த நாளையொட்டி, திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக சாா்பில் வண்ணாா்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் புதன்கிழமை (ஜூன் 3) காலை 10 மணிக்கு அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. இதில் கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் பங்கேற்க வேண்டும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.