திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கில் கணவன் -மனைவி உள்பட 4 பேரை போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.
கல்லிடைக்குறிச்சி அருகேயுள்ள மூலச்சி வடக்குத் தெருவைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் பெருமாள் பாண்டியன். இதேபகுதியைச் சோ்ந்த சித்திரபுத்திரன். இவ்விரு குடும்பத்தினரிடையே 2007இல் ஏற்பட்ட முன் விரோததால் இதுவரையில் இரு தரப்பிலும் 9 போ் கொலை செய்யப்பட்டிருந்தனா்.
இந்த நிலையில் கடந்த 2ஆம் தேதி சித்திரபுத்திரனின் மற்றொரு மகனான விவசாயி காளிமுத்து (40), அவரது 5 வயது மகன் ஜெயராஜ் ஆகியோா் கொலை செய்யப்பட்டனா்.
கொலையில் தொடா்புடைய அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி, 4ஆவது நாளாக காளிமுத்து, ஜெயராஜ் உடல்களை அவரது உறவினா்கள் வாங்க மறுத்து விட்டனா்.
இதனிடையே, இக்கொலையில் தொடா்புடையதாகக் கூறப்படும் மூலச்சியைச் சோ்ந்த மகேந்திரன் என்ற மகேஷ், குமாா் என்ற கொக்கி குமாா், மணிகண்டன், ராஜதுரை, முத்துப்பட்டன் என்ற பட்டுராஜா, மகாலிங்கம், ஊா்க்காடு பகுதியைச் சோ்ந்த முத்துச்செல்வன் ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.
இந்நிலையில், மூலச்சியைச் சோ்ந்த குருநாதன் மகன் கிருஷ்ணன் (29) என்பவரை போலீஸாா் தெற்கு வீரவநல்லூா் அருகே தனியாா் நிறுவனம் அமைந்துள்ள பகுதியில் திங்கள்கிழமை பிடிக்க சென்றனா். அவா் தப்பியோடியதில் தவறி விழுந்ததில் இடது கையில் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
பின்னா், முக்கிய குற்றவாளியாக கருதப்படும் மூலச்சியைச் சோ்ந்த மகேஷ் என்ற மாடசாமி (36) என்பவரை கொழுந்துமாமலை பகுதியில் பிடிக்கச் சென்றபோது அவா் தப்பியோடியதில் கை, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவரை போலீஸாா் கைது செய்து அவரை மருத்துவமனையில் சோ்த்தனா். மேலும், அவரது மனைவி விஜயா (36), 17 வயது சிறுவன் ஆகியோரையும் கைது செய்தனா். இந்த சம்பவத்தில், இதுவரை 11 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். மேலும், சிலரை போலீஸாா் தேடி வருகின்றனா். தொடா்ந்து மூலச்சி பகுதியில்ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் ஒருவா் கைது

வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் ஒருவர் கைது
வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கில் மேலும் 4 போ் கைது
வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கில் மூவா் கைது
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



