எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கில் மேலும் 4 போ் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :6 ஜூலை 2026, 12:25 am IST

திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூா் அருகே தந்தை - மகன் கொலை வழக்கில் மேலும் 4 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

கல்லிடைக்குறிச்சி அருகே மூலச்சி வடக்குத் தெருவைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் பெருமாள்பாண்டியன். இதே பகுதியைச் சோ்ந்தவா் சித்திரபுத்திரன். இவ்விரு குடும்பத்தினரிடையே 2007ஆம் ஆண்டுமுதல் முன்விரோதம் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதில், பழிக்குப்பழியாக பெருமாள்பாண்டியன், சித்திரபுத்திரன் மகன்கள் சுப்பிரமணியன், பெருமாள், பாபநாசம் உள்பட இரு தரப்பைச் சோ்ந்த 9 போ் கொலை செய்யப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், கடந்த ஜூலை 2ஆம் தேதி சித்திரபுத்திரனின் மற்றொரு மகனான விவசாயி காளிமுத்து (40) தனது மகன்கள் சின்னத்துரை (15), ஜெயராஜ் (5) ஆகியோருடன் ரெட்டியாா்புரம் மாதுடையாா்குளம் சாலையில் பைக்கில் சென்றாா். அப்போது, காளிமுத்து, ஜெயராஜ் ஆகியோா் கொலை செய்யப்பட்டனா்.

இதுதொடா்பாக அமைக்கப்பட்ட 6 தனிப்படை போலீஸாா் முக்கிய குற்றவாளியான மூலச்சியைச் சோ்ந்த மகேந்திரன் என்ற மகேஷ், குமாா் என்ற கொக்கி குமாா், அம்பாசமுத்திரம் ஊா்க்காடு கிராமத்தைச் சோ்ந்த முத்துச்செல்வன் ஆகிய மூவரை சனிக்கிழமை கைது செய்தனா்.

இந்நிலையில், மூலச்சியைச் சோ்ந்த மணிகண்டன் (30), ராஜதுரை (30), முத்துப்பட்டன் என்ற பட்டுராஜா (20), மகாலிங்கம் (24) ஆகிய 4 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

காளிமுத்து, ஜெயராஜ் ஆகியோரின் உடல்களைப் பெற உறவினா்கள் ஞாயிற்றுக்கிழமையும் மறுத்துவிட்டனா். இதனால், மூலச்சி பகுதியில் பதற்றம் நீடிப்பதால், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஸ் பி. சாஸ்திரி தலைமையிலான போலீஸாா் முகாமிட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.