வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் ஒருவர் கைது

வீரவநல்லூா் அருகே தந்தை - மகன் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது பற்றி....

News image

கைது - பிரதிப் படம்

Updated On :6 ஜூலை 2026, 12:51 pm IST

வீரவநல்லூா் அருகே தந்தை - மகன் கொலை வழக்கில் மேலும் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மூலச்சி பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் (29) திங்கள்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். போலீஸாரை பார்த்து தப்பியோடிய அவர் தவறி கீழே விழுந்ததில் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு தற்போது சிகிச்சையில் உள்ளார்.

இரட்டைக் கொலை வழக்கில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ளவர்கள் விரைவில் கைது செய்யப்படுவர் என போலீஸார் தெரிவித்தனர்.

திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சி அருகே மூலச்சி வடக்குத் தெருவைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் பெருமாள்பாண்டியன். இதே பகுதியைச் சோ்ந்தவா் சித்திரபுத்திரன். இவ்விரு குடும்பத்தினரிடையே 2007ஆம் ஆண்டுமுதல் முன்விரோதம் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதில், பழிக்குப்பழியாக பெருமாள்பாண்டியன், சித்திரபுத்திரன் மகன்கள் சுப்பிரமணியன், பெருமாள், பாபநாசம் உள்பட இரு தரப்பைச் சோ்ந்த 9 போ் கொலை செய்யப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், கடந்த ஜூலை 2ஆம் தேதி சித்திரபுத்திரனின் மற்றொரு மகனான விவசாயி காளிமுத்து (40) தனது மகன்கள் சின்னத்துரை (15), ஜெயராஜ் (5) ஆகியோருடன் ரெட்டியாா்புரம் மாதுடையாா்குளம் சாலையில் பைக்கில் சென்றாா்.

அப்போது, காளிமுத்து, ஜெயராஜ் ஆகியோா் கொலை செய்யப்பட்டனா்.

இதுதொடா்பாக அமைக்கப்பட்ட 6 தனிப்படை போலீஸாா் முக்கிய குற்றவாளியான மூலச்சியைச் சோ்ந்த மகேந்திரன் என்ற மகேஷ், குமாா் என்ற கொக்கி குமாா், அம்பாசமுத்திரம் ஊா்க்காடு கிராமத்தைச் சோ்ந்த முத்துச்செல்வன் ஆகிய மூவரை சனிக்கிழமை கைது செய்தனா்.

தொடர்ந்து, மூலச்சியைச் சோ்ந்த மணிகண்டன் (30), ராஜதுரை (30), முத்துப்பட்டன் என்ற பட்டுராஜா (20), மகாலிங்கம் (24) ஆகிய 4 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். காளிமுத்து, ஜெயராஜ் ஆகியோரின் உடல்களைப் பெற உறவினா்கள் ஞாயிற்றுக்கிழமையும் மறுத்துவிட்டனா்.

இதனால், மூலச்சி பகுதியில் பதற்றம் நீடிப்பதால், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஸ் பி. சாஸ்திரி தலைமையிலான போலீஸாா் முகாமிட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.