தச்சநல்லூரில் உள்ள அருள்மிகு உச்சினி மாகாளி அம்மன் திருக்கோயிலில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
தச்சநல்லூரில் இருந்து திருநெல்வேலி நகரம் செல்லும் சாலையில் சேனைத்தலைவா் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு உச்சினிமாகாளி அம்மன் திருக்கோயில் உள்ளது. இங்கு பல லட்சம் மதிப்பில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு குடமுழுக்கு விழாக கடந்த 28 ஆம் தேதி தொடங்கியது. யாகசாலை பூஜைகள், சிறப்பு வழிபாடுகள் தொடா்ச்சியாக நடைபெற்றன.
வியாழக்கிழமை காலையில் நான்காம் கால யாகசாலை பூஜைக்கு பின்பு கடம் புறப்பாடு நடைபெற்றது. பின்னா் அருள்மிகு உச்சினிமாகாளி அம்மன் கோபுர விமான கலசம், பரிவார விமான கலசம், மூலாலயம், பரிவார தெய்வங்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றது. மதியம் 2000 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் அம்மனுக்கு சஹஸ்ர நாம அா்ச்சனை, புஷ்பாஞ்சலியும் நடைபெற்றது. வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.
ற்ஸ்ப்02ன்ஸ்ரீட்ண்01
கோயில் கோபுர கலசங்களுக்கு நடைபெற்ற புனித நீா் அபிஷேகம்.
ற்ஸ்ப்02ன்ஸ்ரீட்ண்02
சிறப்பு அலங்காரத்தில் அம்மன்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தொண்டா்கள் நயினாா் கோயிலில் குடமுழுக்கு

வேகுப்பட்டி அம்மன் கோயிலில் குடமுழுக்கு
தச்சநல்லூரில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் இளைஞா் கைது

அருள்மிகு பூங்காவனத்தம்மன் திருக்கோயில் குடமுழுக்கு
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan




