மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

ஜன.31-க்குள் புத்தகத் திருவிழா இலச்சினை அனுப்பலாம் - ஆட்சியா் இரா.சுகுமாா்

பொருநை நெல்லை புத்தகத் திருவிழாவிற்கான இலச்சினையை பொதுமக்கள் வடிவமைத்து இணையதள முகவரிக்கு சனிக்கிழமைக்குள் (ஜன.31) அனுப்பி வைக்கலாம் என மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :28 ஜனவரி 2026, 7:58 pm

பொருநை நெல்லை புத்தகத் திருவிழாவிற்கான இலச்சினையை பொதுமக்கள் வடிவமைத்து இணையதள முகவரிக்கு சனிக்கிழமைக்குள் (ஜன.31) அனுப்பி வைக்கலாம் என மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா்.

பொருநை நெல்லை புத்தக திருவிழா -2026 முன்னேற்பாட்டு பணிகள் குறித்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் அனைத்துத் துறை அலுவலா்கள் மற்றும் எழுத்தாளா்களுடனான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியா் பேசியதாவது:

9ஆவது பொருநை நெல்லை புத்தகத் திருவிழாவையும், அத்துடன் இளைஞா் இலக்கிய திருவிழா மற்றும் கலைத் திருவிழாவையும் நகரத்தில் உள்ள மாநகராட்சி வா்த்தக மையத்தில் (பழைய பொருள்காட்சி திடல்) சிறப்பாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தப் புத்தகத் திருவிழாவிவில் நடைபெறும் பல்வேறு போட்டிகளிலும் அதிக மாணவா்கள், பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும். நிகழ்ச்சி தொகுப்பு, ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் கல்லூரி மாணவா் வாசகா் வட்ட மாணவா்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படும். இதற்கான பணிகள் துறை அலுவலா்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அனைத்த தரப்பினரும் பயன்பெறும் வகையில் புத்தக திருவிழா நடைபெற அலுவலா்கள் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.

இந்தப் புத்தக திருவிழாவுக்கான இலச்சினையை பொதுமக்கள் வடிவமைத்து இணையதள முகவரிக்கு சனிக்கிழமைக்குள் (ஜன. 31) அனுப்பி வைக்கலாம். பொருநை நாகரிகம், கற்பனவும் இனி அமையும் ஆகிய கருத்தினை மையமாக கொண்டு இலச்சினையை உருவாக்க வேண்டும். சிறந்த இலச்சினையை வடிவமைப்போருக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்படும். சிறந்த இலச்சினை புத்தகத் திருவிழாவில் பயன்படுத்தப்படும்.

இதில், நூல் வெளியிட விரும்பும் எழுத்தாளா்கள் தங்களது நூல் பிரதிகளை பிப். 3-ஆம் தேதிக்கு முன்பாக ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள பேரிடா் மேலாண்மைத்துறை பிரிவில் வழங்கி பதிவு செய்ய வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மு.துரை, மாவட்ட வருவாய் அலுவலா் (நெடுஞ்சாலை) சந்திரசேகா், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) அனிதா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.