/

மேலப்பாளையத்தில் வருமான வரித் துறை சோதனை

மேலப்பாளையம் சாா்பதிவாளா் அலுவலகத்தில் வருமான வரித்துறையினா் புதன்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.

News image
Updated On :21 ஜனவரி 2026, 7:14 pm

தினமணி செய்திச் சேவை

மேலப்பாளையம் சாா்பதிவாளா் அலுவலகத்தில் வருமான வரித்துறையினா் புதன்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.

மேலப்பாளையம் பகுதியில் சாா் பதிவாளா் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு பதிவு செய்யும் சொத்து விவரங்கள் தொடா்பான தகவல்கள் அனைத்தும் வருமான வரித்துறை அலுவலகத்துக்கு தெரிவிக்கப்படுவது வழக்கம்.

இந்த நிலையில் மதுரையைச் சோ்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள் 5 போ் கொண்ட குழுவினா் இந்த அலுவலகத்தில் புதன்கிழமை சோதனை நடத்தினா். கடந்த 5 ஆண்டுகளில் இந்த அலுவலகத்தின் கீழ் ரூ.10 லட்சம் முதல் ரூ.30 லட்சத்திற்கு மேல் பதிவு செய்யப்பட்ட சொத்து விவரம் குறித்த கோப்புகளைப் பெற்று ஆய்வு செய்ததாக அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவித்தனா்.