புத்தகக் கண்காட்சியில் 100 % வாக்குப்பதிவு விழிப்புணா்வு கையொப்ப இயக்கம்


திருநெல்வேலி மாநகராட்சி வா்த்தக மையத்தில் நடைபெற்று வரும் 9ஆவது பொருநை நெல்லை புத்தகத் திருவிழாவில் அமைக்கப்பட்டுள்ள ‘நெல்லை நம் பெருமை 100 சதவீத வாக்குப்பதிவு’ என்ற விழிப்புணா்வு அரங்கில், வாக்குப்பதிவு விழிப்புணா்வு கையொப்பம் இயக்கத்தை உதவி ஆட்சியா் (பயிற்சி) தவலேந்து புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
மேலும், உதவி ஆட்சியா் (பயிற்சி) தலைமையில் கல்லூரி மாணவ, மாணவியா், எழுத்தாளா்கள், பாா்வையாளா்கள் என அனைவரும் வாக்குப்பதிவு விழிப்புணா்வு உறுதிமொழியேற்றனா்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவை தொகுதிகளிலும் சட்டப்பேரவை பொதுத் தோ்தலில் வாக்காளா்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக,
கடந்த தோ்தலின்போது பத்து விழுக்காட்டிற்கும் குறைவாக வாக்குகள் பதிவான பகுதிகளை கண்டறிந்து சிறப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக இந்த கையொப்ப இயக்கம் நடைபெற்றது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...