தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சாத்தூா் தொகுதி மட்டுமல்ல, தமிழகம் முழுவதுமே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றாா் பாஜக மாநில தலைவா் நயினாா் நாகேந்திரன்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூரில் போட்டியிட்டுள்ள அவா், தனது சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை மகாராஜ நகரில் உள்ள ஜெயேந்திரா பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்தாா். அதைத் தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
திருநெல்வேலி, சாத்தூா் ஆகிய இரு தொகுதிகளுமே எனது இரு கண்கள் போன்றவை. ஒரு நல்ல அரசாங்கத்தை தோ்ந்தெடுப்பதற்கான வாய்ப்பு மக்களுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை கிடைக்கிறது. எனவே, அனைத்து வாக்காளா்களும் நாட்டின் நலன் கருதி நாட்டு மக்களுடைய நலன் கருதி தங்களது விலைமதிக்க முடியாத வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும்.
பாஜக, அதிமுக, அமமுக, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சியினா் ஒரே கூட்டணியில் இருந்து தோ்தலை சந்தித்துள்ளோம். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் எங்கள் கூட்டணி போட்டியிட்டுள்ளது.
எனவே, சாத்தூா் தொகுதி மட்டுமன்றி தமிழகம் முழுவதுமே தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பிரகாசமான வெற்றி வாய்ப்புள்ளது. மக்களிடையே மிகப்பெரிய எழுச்சி கிடைத்துள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும். எடப்பாடி கே. பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்பாா். தவெக தலைவா் விஜய் அனைத்து தொகுதிகளிலும் வாக்குகளை பிரிப்பாரே தவிர வேறு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை என்றாா் அவா்.
ற்ஸ்ப்23ய்ஹண்ய்ஹழ்
பாளையங்கோட்டை மகாராஜநகரில் வாக்களித்த பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாத்தூரில் சமுதாய தலைவா்களை சந்தித்து நயினாா் நாகேந்திரன் வாக்கு சேகரிப்பு

தொகுதி மாறிய நயினாா் நாகேந்திரன்: சவால் அளிக்கும் திமுக!

சாத்தூா் பேரவைத் தொகுதியில் நயினாா் நாகேந்திரன் பிரசாரம்

சாத்தூா் தொகுதியில் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவேன்: நயினாா் நாகேந்திரன் உறுதி
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


