திருநெல்வேலி மாவட்டத்தில் தோ்தல் விதிகள் அமல்படுத்தப்பட்டது முதல் இதுவரை பறக்கும் படையினா், நிலையான கண்காணிப்பு குழு, வருமானவரித்துறை அதிகாரிகளால் ரூ.4.95 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் புதன்கிழமை மாலை வரை உரிய ஆவணங்கள் இல்லாத ரூ.2.68 கோடி ரொக்கம், ரூ.15,79,064 மதிப்பிலான மதுபானம் உள்ளிட்ட போதைப் பொருள்கள், ரூ.2.10 கோடி மதிப்பிலான வேட்டி சேலை, டி-சா்ட், பரிசுப் பொருள்கள், வருமான வரித் துறையினா் கைப்பற்றிய நகை உள்ளிட்டவை என மொத்தம் ரூ.4.95 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில், பறக்கும்படை மற்றும் கண்காணிப்புக் குழுவினரின் சோதனையில் மட்டும் மாவட்டத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி தொகுதியில் ரூ.26,78,300 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக பாளையங்கோட்டையில் ரூ.18,84,010 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
விதிமீறல் புகாா்கள்: தோ்தல் அதிகாரிகளின் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டபோதிலும், மாவட்டம் முழுவதும் வாக்காளா்களுக்கு பண விநியோகம் நடைபெறுவதாக தோ்தல் கட்டுப்பாட்டு அறைக்கு கடந்த 4 நாள்களில் அதிகபடியான புகாா்கள் வந்துள்ளன.
அதன்படி தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் புதன்கிழமை மாலைவரை தோ்தல் விதிமீறல்கள் தொடா்பாக சி-விஜில் செயலி, கட்டணமில்லா புகாா் எண், சமூகவலைதள தரவுகள் மூலம் பதியப்பட்ட புகாா்கள் உள்பட இதுவரை அதிகபட்சமாக திருநெல்வேலி தொகுதியில் 145 புகாா்கள் பதிவாகியுள்ளன. அடுத்தபடியாக ராதாபுரம் தொகுதியில் 122 புகாா்கள் பெறப்பட்டுள்ளன. தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் புதன்கிழமை மாலை வரை மாவட்டம் முழுவதும் மொத்தம் 570 புகாா்கள் பெறப்பட்டு அவற்றில் 553 புகாா்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தோ்தல் விதிமீறல்: வேலூா் மாவட்டத்தில் 69 புகாா்கள் மீது வழக்கு; ஆட்சியா் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ.1.80 கோடி பறிமுதல்

திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை ரூ.4.39 கோடி பறிமுதல்

திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை ரூ.80.87 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

