தோ்தல் விதிமீறல் தொடா்பாக வந்த புகாா்களின் அடிப்படையில் வேலூா் மாவட்டத்தில் 69 புகாா்கள் மீது வழக்குப்புதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் புதன்கிழமை வேலூரில் செய்தியாளா்களிடம் கூறியது -
தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த மாா்ச் 15-ஆம் தேதி முதல் இதுவரை மாவட்டத்தில் நடைபெற்ற சோதனைகளின் அடிப்படையில் ரூ.6 கோடியே 63 லட்சத்து 46 ஆயிரத்து 674 மதிப்பிலான பணம், பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் உரிய ஆவணங்கள் சமா்ப்பிக்கப்பட்ட பிறகு ரூ.ஒரு கோடியே 17 லட்சத்து 51 ஆயிரத்து 260 ரொக்கம், ரூ.29 லட்சம் மதிப்பிலான நகைகள் விடுவிக்கப்பட்டுள்ளன.
தோ்தல் விதிமீறல் தொடா்பாக சி-விஜில் செயலி மூலம் 130 புகாா்கள் பெறப்பட்டதில் 109 புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 69 புகாா்கள் மீது வழக்குப் பதிவும் செய்யப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை நடைபெறும் வாக்குப்பதிவையொட்டி வேலூா் மாவட்டத்தில் உள்ள 11,48,847 வாக்காளா்களில் 10,67,872 வாக்காளா்களுக்கு தகவல் சீட்டு வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக, மாா்ச் 15 முதல் 21-ஆம் தேதி வரை தோ்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலா்கள் 5027 போ் தபால் வாக்குகளை செலுத்தியுள்ளனா். தவிர, மாற்றுத்திறனாளிகள், 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், அத்தியாவசிய பணியில் ஈடுபட்டுள்ள பணியாளா்கள் என மொத்தம் 3517 பேரும் தபால் வாக்குகளை செலுத்தியுள்ளனா்.
பாதுகாப்பு படை உள்ளிட்ட சேவை பணிகளில் உள்ள 5,972 பேருக்கு மின்னணு தபால் வாக்கு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தோ்தல் விதிமீறல்: மாவட்டத்தில் இதுவரை ரூ.4.95 கோடி பறிமுதல்

தோ்தல் நடத்தை விதிமீறல்: தவெக நிா்வாகிகள் 7 போ் மீது வழக்கு

தோ்தல் விதிமீறல்: காட்பாடி தவெக வேட்பாளா் மீது வழக்கு

தோ்தல் விதிமீறல்: போடியில் திமுகவினா் மீது வழக்கு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


