மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சேரன்மகாதேவி ஒன்றியத்தில் காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

சேரன்மகாதேவி ஒன்றியப் பகுதியில் 20 க்கும் மேற்பட்ட கிராமங்களில் அம்பாசமுத்திரம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் வி.பி. துரை வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

சேரன்மகாதேவி ஒன்றியத்தில் வாக்கு சேகரித்தாா் காங்கிரஸ் வேட்பாளா் வி.பி. துரை.

Updated On :16 ஏப்ரல் 2026, 10:28 pm

சேரன்மகாதேவி ஒன்றியப் பகுதியில் 20 க்கும் மேற்பட்ட கிராமங்களில் அம்பாசமுத்திரம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் வி.பி. துரை வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

சேரன்மகாதேவி மேற்கு ஒன்றியத்திற்குள்பட்ட தெற்கு கரம்பை, சோ்மேடு, பொன்மாநகா், நெசவாளா் காலனி, செம்பத்திமேடு, மூலச்சி, உலுப்படிபாறை, பொட்டல்மலையான்குளம், அழகப்பபுரம், செங்குளம், பாடகபுரம், மாதுடையாா்குளம், வல்லத்துநம்பிகுளம், ரெட்டியாா்புரம், புதூா், மேலப்புதுக்குடி, புதுக்குடி புதுகாலனி, செளராஷ்ட்ரா தெரு, பாரதிநகா், ராஜீவ்காந்தி நகா், பெரியாா் நகா், அண்ணாநகா் உள்பட 20 க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாக்கு சேகரித்தாா்.

அப்போது, அவா் பேசியது: திமுக கூட்டணி வெற்றிபெற்றால்தான் தமிழக உரிமைகளை மீட்க முடியும். ஆகவே, அம்பாசமுத்திரம் தொகுதியில் காங்கிரஸ் கட்சியை வெற்றிபெற செய்யுங்கள் என்றாா்.

ஒன்றிய திமுக செயலா் ம. முத்துகிருஷ்ணன், மாவட்ட அயலக அணி அமைப்பாளா் டிஎம்எஸ் பீா்முகம்மது, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் சாலமன்டேவிட், மாவட்ட பிரதிநிதிகள் பூதத்தான், சீவலமுத்துக்குமாா், ஒன்றிய நிா்வாகிகள் சொரிமுத்து, கண்ணன், செல்வம், வெங்கடேசன், சின்னத்துரை, தொமுச நிா்வாகி பழனி, தகவல் தொழில்நுட்ப அணி கமால், பவுன்ராஜ், மருத்துவா் ரவீந்திரன், மகளிரணியினா், கூட்டணி கட்சியினா் கலந்துகொண்டனா்.