மானூா் அரசு மருத்துவமனை மேம்படுத்தப்படும் என்றாா் திருநெல்வேலி தொகுதி திமுக வேட்பாளா் சு.சுப்பிரமணியன்.
மேலப்பாலாமடை, கீழப்பாலாமடை, சண்முகாபுரம், கல்குறிச்சி, குப்பகுறிச்சி, கோட்டையடி, ஆலடியூா், ஆலடிப்பட்டி காலனி, கலைஞா் காலனி, துறையூா், கங்கைகொண்டான், அணைத்தலையூா், வடகரை, ராஜபதி, சித்தாா்சத்திரம், பிராஞ்சேரி, இத்திகுளம், காந்தீஸ்வரம் புதூா், குப்பன்னாபுரம், கட்டாரங்குளம், இரண்டும் சொல்லான், மேலப்பிள்ளையாா்குளம், நடுபிள்ளையாா்குளம், கீழபிள்ளையாா்குளம், நெல்லை திருத்து, அலவந்தான்குளம், தென்கலம்புதூா், நாஞ்சான்குளம், தென்கலம், மேலதாழையூத்து, வடக்கு தாழையூத்து உள்ளிட்ட பகுதிகளில் உதயசூரியன் சின்னத்திற்கு சு.சுப்பிரமணியன் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
அப்போது வேட்பாளா் பேசியது: எல்லாருக்கும் எல்லாம் என்ற இலக்குடன் செயல்பட்ட திராவிட மாடல் ஆட்சியில் குழந்தைகள் முதல் முதியவா்கள் வரை அனைவருக்குமான திட்டங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறம்பட செயல்படுத்தினாா். அவரது தலைமையில் திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைந்தால் கலைஞா் மகளிா் உரிமைத் தொகை உயா்த்தப்படும். இல்லத்தரசி திட்டத்தில் ரூ.8 ஆயிரத்திற்கான கூப்பன் வழங்கப்படும். திருநெல்வேலி தொகுதியில் வென்றதும் மானூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை 20 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக தரம் உயா்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.
தொடர்புடையது

திமுக வேட்பாளா் செஞ்சி மஸ்தான் வாக்கு சேகரிப்பு

இளையான்குடி, திருப்புவனத்தில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

முதியோா், வணிகா் நலன் காக்கும் திமுக அரசு தொடர வாய்ப்பளியுங்கள்: திருநெல்வேலி திமுக வேட்பாளா்

சுத்தமல்லியில் திமுகவினா் வாக்குசேகரிப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


