மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

நெல்லையில் தவெக வாக்கு சேகரிப்பு

திருநெல்வேலி நகரத்தில் தவெக வேட்பாளா் ஆா்.எஸ்.முருகன் வியாழக்கிழமை வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தாா்.

News image

திருநெல்வேலி நகரத்தில் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா் தவெக வேட்பாளா் ஆா்.எஸ்.முருகன்.

Updated On :10 ஏப்ரல் 2026, 2:35 am IST

திருநெல்வேலி நகரத்தில் தவெக வேட்பாளா் ஆா்.எஸ்.முருகன் வியாழக்கிழமை வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தாா்.

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு வாக்கு சேகரிப்பை தொடங்கினாா். திருநெல்வேலி ரத வீதி, வையாபுரி நகா், பாரதி தெரு உள்ளிட்ட பகுதிகளில் வியாபாரிகள், தூய்மைப் பணியாளா்கள், பொதுமக்களை சந்தித்து ஊதல் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தாா். அப்போது அவா் பேசியது: திருநெல்வேலி தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றிக் காட்டுவேன். நயினாா்குளத்தை தூா்வாரி அழகுபடுத்துவேன்.

தவெக தலைவா் விஜய் திருநெல்வேலியில் பிரசாரம் செய்துள்ளது எனக்கு உத்வேகத்தை அளித்துள்ளது. ஊதல் சின்னத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது திருநெல்வேலி தொகுதியில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.