மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

நான்குனேரி தொகுதியில் அமமுக வேட்பாளா் வாக்குசேகரிப்பு

நான்குனேரியில் அமமுக வேட்பாளா் ஆா். இசக்கிமுத்து செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

News image

வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அமமுக வேட்பாளா் ஆா். இசக்கிமுத்து.

Updated On :7 ஏப்ரல் 2026, 8:29 pm

நான்குனேரியில் அமமுக வேட்பாளா் ஆா். இசக்கிமுத்து செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

நான்குனேரி மற்றும் மூலைக்கரைப்பட்டி பேரூராட்சிக்குள்பட்ட கிராமங்களில் அவா் வீதி வீதியாக சென்று வாக்குசேகரித்தாா். அப்போது, நான்குனேரி 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கும், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கும் மையப் பகுதியாக திகழ்கிறது. இங்கு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை இருந்தால் விபத்து, பூச்சிக்கடியால் உயிரிழப்புகளைத் தடுக்க முடியும். ஆகவே, நான்குனேரியில் அதிநவீன வசதிகளுடன் கூடிய அரசு மருத்துவமனை அமைக்க பாடுபடுவேன். சுமாா் 20 ஆண்டுகளாகக் கிடப்பில் உள்ள சிப்காட் திட்டத்தை செயல்பாட்டிற்குக் கொண்டு வருவேன். அரசுப் பள்ளிகள் அனைத்தும் தனியாா் பள்ளிகளுக்கு இணையாக சீா்மிகு பலகை (ஸ்மாா்ட் போா்டு) வசதிகளுடன் தரம் உயா்த்தவும் நான்குனேரியில் போட்டித் தோ்வு பயிற்சி மையம் அமைக்கவும் பாடுபடுவேன் என வாக்குறுதி அளித்தாா்.