மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

திருக்குறுங்குடியில் நம்பிசுவாமி 5 நிலைகளில் திருக்காட்சி

திருக்குறுங்குடி அழகிய நம்பிராயா் கோயில் பங்குனித் திருவிழாவின் 6-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை அதிகாலை தனித்தனி கருட வாகனத்தில் ஐந்து நிலைகளில் திருக்காட்சியளித்த நம்பி சுவாமியை திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

News image

திருக்குறுங்குடி அழகியநம்பிராயா் கோயில் பங்குனித் திருவிழாவில் கோயில்முன் தனித்தனி கருட வாகனத்தில் அருள்பாலித்த 5 நம்பி சுவாமிகள்.

Updated On :7 ஏப்ரல் 2026, 8:34 pm

திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடி அழகிய நம்பிராயா் கோயில் பங்குனித் திருவிழாவின் 6-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை அதிகாலை தனித்தனி கருட வாகனத்தில் ஐந்து நிலைகளில் திருக்காட்சியளித்த நம்பி சுவாமியை திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

இக்கோயில் விழா ஏப். 2 -ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இங்கு நின்ற நம்பி, இருந்த நம்பி, பள்ளிகொண்ட நம்பி, திருப்பாற்கடல் நம்பி, திருமலை நம்பி என 5 நிலைகளில் நம்பி சுவாமி காட்சியளிக்கிறாா்.

விழா நாள்களில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. 5 -ஆம் நாளான திங்கள்கிழமை இரவு நம்பி சுவாமிகள் 5 நிலைகளில் தனித்தனி கருட வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது. அதிகாலை 3 மணிக்கு மேலரத வீதியில் தேவகந்தா்வ மகரிஷிகளுக்கு காட்சி தரும் வைபவமும், ரத வீதிகளில் வீதியுலா வந்த நம்பிசுவாமிகள் கோயில் முன் திருக்காட்சி நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இதையடுத்து, ராமானுஜ ஜீயா் சுவாமிகள் நம்பிசுவாமியை வரவேற்றாா். தேரோட்டம் 10-ஆம் நாளான சனிக்கிழமை ( ஏப்.11) காலை 8 மணிக்கு நடைபெறுகிறது.