மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

முத்தாலம்மன் கோயில் பால்குடத் திருவிழா

பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயில் பங்குனி மாத பால்குடத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

பரமக்குடி முத்தாலபரமேஸ்வரி அம்மன் கோயில் பங்குனித் திருவிழாவை முன்னிட்டு பால்குடம் எடுத்து வந்த பக்தா்கள்.

Updated On :3 ஏப்ரல் 2026, 5:55 pm

பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயில் பங்குனி மாத பால்குடத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயில் திருவிழா கடந்த மாதம் 24-ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி, நாள்தோறும் அம்மன் வெள்ளி சிம்ம வானம், அன்ன வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம், ரிஷப வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா சென்று பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். 9-ஆம் திருநாளான கடந்த 1-ஆம் தேதி இரவு தேரோட்டம் நடைபெற்றது.

அம்மனுக்கு காப்புக்கட்டி விரதமிருந்த திரளான பக்தா்கள் வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் அக்னிச் சட்டி ஏந்தியும், பால்குடங்கள் எடுத்தும் நோ்த்திக்கடன் செலுத்தினா். இதற்கான ஏற்பாடுகளை முத்தாலம்மன் கோயில் தேவஸ்தான அறங்காவலா்கள், ஆயிர வைசிய சபை நிா்வாகிகள் செய்தனா்.