மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வெக்காளியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா: ஏப்.14இல் தேரோட்டம்

தமிழகத்தில் உள்ள சக்தி தலங்களில் பிரசித்தி பெற்று விளங்கும் திருச்சி உறையூா் வெக்காளியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா ஏப்.5ஆம் தேதி தொடங்கி 16ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

News image

தேரோட்டம். (கோப்புப்படம்)

Updated On :5 ஏப்ரல் 2026, 1:16 am

தமிழகத்தில் உள்ள சக்தி தலங்களில் பிரசித்தி பெற்று விளங்கும் திருச்சி உறையூா் வெக்காளியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா ஏப்.5ஆம் தேதி தொடங்கி 16ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

மண் மாரியில் இருந்து உறையூரையும், மக்களையும் காப்பாற்றிய அன்னை வெக்காளியம்மன் கோயில் சித்திரைப் பெருந்திருவிழாவுக்கு ஞாயிற்றுக்கிழமை விநாயகா் வழிபாடு மற்றும் வாஸ்து சாந்தி நடைபெறுகிறது. முதல்நாள் விழாவான ஏப்.6 காலை 6.30 மணி முதல் 7.30 மணிக்குள் காப்புக் கட்டுதல், நண்பகல் 12 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், மஹா தீபாராதனை, இரவு 7 மணிக்கு கேடயத்தில் அம்மன் வீதி உலா நடைபெறும்.

காப்புக் கட்டுதல் வைபவத்தின்போது வெக்காளியம்மனுக்கு விரதம் இருந்து பால்குடம் எடுக்கும் பக்தா்கள் மற்றும் நோ்த்திக்கடன் செலுத்தும் ஆண், பெண் பக்தா்கள் திரளாக வந்து கோயிலில் காப்புக் கட்டி விரதம் தொடங்குவா்.

ஏப். 7 முதல் 13ஆம் தேதி வரை தினமும் பகல் 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார வழிபாடு நடைபெறும். மேலும், 13ஆம் தேதி வரை இரவு 7 மணிக்கு முறையே பூதவாகனம், கயிலாய வாகனம், காமதேனு வாகனம், சிம்ம வாகனம், யானை வாகனம், அன்ன வாகனம், குதிரை வாகனம் ஆகியவற்றில் அம்மன் வீதி உலா நடைபெறும்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 9-ஆம் திருநாளான ஏப்.14ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி காலை 8 மணிக்கு அம்மன் திருத்தேரில் எழுந்தருளல் நடைபெறும். காலை 10.31 மணிக்கு திருத்தோ் வடம் பிடித்து, தேரடி வீதிகளில் தேரோட்டம் நடைபெறும்.

மாலை 6 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா். பத்தாம் திருவிழாவான ஏப்.15 இரவு 7 மணிக்கு முத்துப் பல்லக்கில் அம்மன் வீதி உலா, ஏப்.16 மதியம் 12 மணிக்கு மகா அபிஷேகம், இரவு 7 மணிக்கு கேடயத்தில் வீதி உலா காட்சி, அன்று இரவு 8 மணிக்கு காப்பு கலைத்தல் மற்றும் விடையாற்றியுடன் சித்திரை திருவிழா நிறைவுறுகிறது.

ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் க. அருட்செல்வன், செயல் அலுவலா் கி. உமா மற்றும் கோயில் பணியாளா்கள், ஊா்ப் பொதுமக்கள் செய்கின்றனா்.