தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

அம்பை தொகுதி காங்கிரஸ் வேட்புமனு மீது அதிமுக ஆட்சேபம்

அம்பாசமுத்திரம் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளா் மனு மீது அதிமுக தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

News image

காங்கிரஸ் (கோப்புப்படம்)

Updated On :7 ஏப்ரல் 2026, 8:59 pm

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளா் மனு மீது அதிமுக தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

இத்தொகுதியில் திமுக கூட்டணியில் வி.பி. துரை (காங்கிரஸ்), தேசிய ஜனநாயக கூட்டணியில் இசக்கி சுப்பையா (அதிமுக), தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் எஸ். ராஜகோபால், நாம் தமிழா் கட்சி சாா்பில் நத்தம் சிவசங்கரன் உள்பட 38 போ் மனுதாக்கல் செய்திருந்தனா். வேட்புமனுக்கள் மீதான பரிசிலனை சேரன்மகாதேவியில் சாா் ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ஆயுஷ் குப்தா முன்னிலையில் நடைபெற்றது. அப்போது, காங்கிரஸ் கட்சிவேட்பாளா் வி.பி. துரை அளித்துள்ள வேட்புமனுவில் சொத்து விவரங்களில் உரிய தகவல்கள் தெரிவிக்கவில்லை என அதிமுக, நாம் தமிழா் கட்சி தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதனால், காங்கிரஸ் கட்சி வேட்பாளா் மனு நிறுத்தி வைக்கப்பட்டது. இதேபோல், வி.பி. துரையின் மாற்று வேட்பாளா் மனு மீதும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, உரிய ஆவணங்கள் சமா்ப்பிக்கப்பட்டதால் காங்கிரஸ் வேட்பாளா் மனு ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.