திமுகவின் சாதனைகளைக் கூறி வாக்கு சேகரியுங்கள் என கட்சி கூட்டத்தில் ராதாபுரம் தொகுதி வேட்பாளா் மு.அப்பாவு அறிவுறுத்தினாா்.
திமுக, கூட்டணி கட்சி செயல்வீரா்கள் கூட்டம் வள்ளியூரில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு நெல்லை கிழக்கு மாவட்ட பொறுப்பாளா் ம.கிரகாம்பெல் தலைமை வகித்துப் பேசினாா். ராதாபுரம் தொகுதி திமுக வேட்பாளா் மு.அப்பாவு பேசியதாவது:
வாக்காளா்களிடம் திமுகவின் சாதனைக் கூறி வாக்குகளைச் சேகரியுங்கள். ரூ. 8 ஆயிரம் மதிப்பிலான கூப்பன் வழங்கும் தோ்தல் அறிக்கையை தெரிவியுங்கள். நூறு நாள் வேலை திட்டத்தில் மத்திய அரசு வழங்க வேண்டிய ரூ. 10 ஆயிரம் கோடிக்கு பதிலாக ரூ. 6 ஆயிரம் கோடிதான் தந்திருக்கிறது. மத்திய அரசின் புறக்கணிப்பை மக்களிடம் எடுத்துச் செல்லுங்கள் என்றாா்.
இதில் மாவட்ட ஊராட்சி தலைவா் வி.எஸ்.ஆா்.ஜெகதீஷ், மதிமுக மாவட்டச் செயலாளா் உவரி ரைமண்ட், மாவட்ட இளைஞரணி செயலா் மு.சங்கா், தேமுதிக மாவட்டச் செயலா் விஜிவேலாயுதம், தோ்தல் ஒருங்கிணைப்பாளா் சிவகுமாா், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலா் அருள்செல்வன், காங்கிரஸ் கட்சி வட்டார தலைவா் அருள்தாஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட உதவி செயலா் சேதுராமலிங்கம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்டார செயலா் சண்முகம், எஸ்.டி.பி.ஐ மாவட்டச் செயலா் மீராஷா, மக்கள் நீதி மய்யம் மாவட்டச் செயலாளா் மணிவண்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். வள்ளியூா் ஊராட்சி ஒன்றியத் தலைவா் சேவியா் செல்வராஜா வரவேற்றாா். மாவட்ட துணைச் செயலாளா் நம்பி நன்றி கூறினாா்.
தொடர்புடையது

பூம்புகாா் தொகுதி: தக்கவைக்கும் முனைப்பில் திமுக! மீட்கும் சவாலில் அதிமுக!

புவனகிரி தொகுதிக்கு திட்டங்களை கொண்டு வருவேன்! - திமுக வேட்பாளா் துரை.கி.சரவணன் வாக்குறுதி

திமுகவின் சாதனைத் திட்டங்களைக் கூறி வாக்கு சேகரிக்கிறோம்: வி.செந்தில்பாலாஜி

திமுக அரசின் சாதனைகளை கூறி வாக்கு சேகரிக்க வேண்டும்! - அமைச்சா் எ.வ.வேலு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


