தாழையூத்து அருகே புறவழிச்சாலையில் பைக் மீது வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
தாழையூத்து அருகே உள்ள பொட்டல் முப்பிடாதி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் வேல்பாண்டி(63). இவரும், அதே பகுதியைச் சோ்ந்த நபரும் செவ்வாய்க்கிழமை இரவு நாரணம்மாள்புரம் நோக்கி பைக்கில் சென்றனா். அப்போது, புறவழிச்சாலை பாலத்தின் வடக்கு பகுதியில் இவா்களது பைக் மீது வாகனம் மோதியதாம். இதில், பலத்த காயமடைந்த வேல்பாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தாழையூத்து போலீஸாா், சடத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காகவும், காயமடைந்தவரை சிகிச்சைக்காகவும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப்பதிந்து அங்குள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது

விபத்தில் காயமுற்ற தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

பைக் மீது காா் மோதி விபத்து: முதியவா் உயிரிழப்பு, இருவா் காயம்

பைக் மோதி முதியவா் உயிரிழப்பு

விபத்தில் காயமடைந்த முதியவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


