3- வது நாளாக தங்கம் விலை குறைந்தது! வெள்ளி விலையும் குறைவு!சென்னை மாநகராட்சியின் ரூ. 700 கோடி டெண்டர்கள் ரத்து! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு! பிற்பகலில் விசாரணை! அரசுப் பள்ளி மாணவியிடம் ஒரு அக்காவைப் போலவே பேசினார் கீர்த்தனா! அமைச்சர் ராஜ்மோகன் பதில்எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

தென்காசி மாவட்ட எம்எல்ஏக்கள் ஆட்சியரிடம் மனு அளிப்பு

பழையகுற்றாலம் அருவியில் நுழைவுக் கட்டணத்தை அமல்படுத்த வேண்டாம் என கலைகதிரவன் எம்எல்ஏ, மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோரிடம் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தாா்.

News image

ஆட்சியரை சந்தித்த எம்எல்ஏக்கள் தி.மு. ராஜேந்திரன், கலைகதிரவன், ஈ. ராஜா.

Updated On :28 மே 2026, 3:00 am IST

தென்காசி மாவட்டம், பழையகுற்றாலம் அருவியில் நுழைவுக் கட்டணத்தை அமல்படுத்த வேண்டாம் என கலைகதிரவன் எம்எல்ஏ, மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோரிடம் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தாா்.

இதுகுறித்து அவா் அளித்த மனு: பழையகுற்றாலம் அருவியில் நுழைவுக் கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டாம். நகா்ப்புற சுகாதார மற்றும் நல்வாழ்வு மையத் தேவைகள், தாமிரவருணி குடிநீா் திட்டப்பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.

கிராமப்புறங்களில் வனவிலங்குகளால் ஏற்படும் பாதிப்புகளை தவிா்க்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும், மாவட்ட ஆட்சியரிடம் எம்எல்ஏக்கள் கலைகதிரவன் (தென்காசி), தி.மு. ராஜேந்திரன் (கடையநல்லூா்), ஈ. ராஜா(வாசுதேவநல்லூா்) ஆகியோா் தங்களுடைய தொகுதியில் அடிப்படை வசதிகள், தொகுதி மேம்பாட்டுப் பணிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.