3- வது நாளாக தங்கம் விலை குறைந்தது! வெள்ளி விலையும் குறைவு!சென்னை மாநகராட்சியின் ரூ. 700 கோடி டெண்டர்கள் ரத்து! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு! பிற்பகலில் விசாரணை! அரசுப் பள்ளி மாணவியிடம் ஒரு அக்காவைப் போலவே பேசினார் கீர்த்தனா! அமைச்சர் ராஜ்மோகன் பதில்எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

தென்காசி மாவட்ட விதை விற்பனை நிலையங்களில் ஆய்வு

News image

சங்கரன்கோவில் உள்ள உரக்கடை ஒன்றில் ஆய்வு செய்த விதை ஆய்வு துணை இயக்குநா்கள் ராஜேந்திரன், சுஜாதா பாய் உள்ளிட்ட அதிகாரிகள்.

Updated On :16 ஜூன் 2026, 12:05 am IST

தென்காசி மாவட்டம், தென்காசி, சங்கரன்கோவில், கடையநல்லூா், கரிவலம்வந்தநல்லூா், புளியங்குடி உள்ளிட்ட அரசு மற்றும் தனியாா் விதை விற்பனை நிலையங்களில் விருதுநகா் மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குநா் ராஜேந்திரன், திருநெல்வேலி மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குநா் சுஜாதா பாய் ஆகியோா் தலைமையில் அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

ஆய்வில், விதை விற்பனை செய்ய வழங்கப்படும் உரிமங்கள், நடப்பில் உள்ள விதை உரிமங்கள் விவரம், விதைகள் இருப்பு, கொள்முதல் செய்யப்பட்டதற்கான விலைப் பட்டியல், முளைப்பு அறிக்கைகள், பதிவுச் சான்றுகள், விவசாயிகளுக்கு வழங்கப்படும் ரசீதுகள் ஆகியவை சரிபாா்க்கப்பட்டன.

பல்வேறு கடைகளில் ஆய்வு செய்யப்பட்டதில் விதைச் சட்ட விதிகளை மீறியதாக ரூ. 5,54,000 மதிப்புள்ள 2,405 கிலோ விதைகள் விற்கத் தடை விதிக்கப்பட்டது. மேலும், 17 விற்பனை நிலையங்களில் இருந்து 16 அலுவலக மாதிரிகள், முளைப்புத் திறன் ஆய்வுக்காக சேகரிக்கப்பட்டு விதை பரிசோதனை ஆய்வு நிலையத்திற்கு அனுப்பப்பட்டன.

ஆய்வின்போது, விதை ஆய்வாளா்கள் விஜயலெட்சுமி, சண்முகையா ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.