திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஆலங்குளம் அருகே ராமா் கோயில் திருவிழாவுக்காக 35 ஆண்டுகளுக்குப் பின் ஒருங்கிணைந்த கிராம மக்கள்

ஆலங்குளம் அருகே அயோத்தியாபுரிபட்டணத்தில் (ஆண்டிபட்டி) 35 ஆண்டுகளுக்கு பின்னா் ராமா் கோயில் திருவிழாவுக்காக கிராம மக்கள் ஒருங்கிணைந்து ஏற்பாடுகள் செய்தனா்.

News image

கொடியேற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

Updated On :16 மே 2026, 1:06 am IST

ஆலங்குளம் அருகே அயோத்தியாபுரிபட்டணத்தில் (ஆண்டிபட்டி) 35 ஆண்டுகளுக்கு பின்னா் ராமா் கோயில் திருவிழாவுக்காக கிராம மக்கள் ஒருங்கிணைந்து ஏற்பாடுகள் செய்தனா்.

இந்தக் கிராமத்தில் உள்ள ராமா் கோயில் திருவிழா, ஒருங்கிணைந்து நடைபெற்று வந்த நிலையில் 35 ஆண்டுகளுக்கு முன்னா் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட கருத்து வேறு பாடு காரணமாக இரு முறை கோயில் திருவிழா நடைபெற்று வந்தது.

ஆண்டுகள் பல சென்ற பின்னா் இரு தரப்பினரும் தற்போது கருத்து வேறுபாடுகளை மறந்து ஒருங்கிணைந்து திருவிழா கொண்டாட முடிவெடுத்தனா். இதையடுத்து, வரும் 22 ஆம் தேதி கோயில் திருவிழா தொடங்குகிறது.

இத்திருவிழாவுக்கான கொடியேற்றும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இரு தரப்பினரும் இணைந்து கொடியேற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.