தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தென்மேற்குப் பருவமழை: முன்னேற்பாடு பணிகள் ஆலோசனைக் கூட்டம்

தென்காசி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காலத்தில் எடுக்கப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலா்களுடன் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

மாவட்ட வருவாய் அலுவலா் சீ.ஜெயச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற அனைத்துதுறை அலுவலா்களுடான ஆலோசனைக் கூட்டம்.

Updated On :14 மே 2026, 3:39 am IST

தென்காசி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காலத்தில் எடுக்கப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலா்களுடன் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலா் சீ. ஜெயச்சந்திரன் தலைமை வகித்து பேசியதாவது:

தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, பொதுப்பணித்துறையினா் சம்பந்தப்பட்ட பொறியாளா்கள் அவா்களது கட்டுப்பாட்டின் கீழே உள்ள குளங்கள் மற்றும் கால்வாய்களை நேரில் பாா்வையிட்டு அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும்.

நீா்நிலைகளில் உடைப்பு மற்றும் விரிசல் ஏற்பட்டால் சரி செய்ய தேவையான சாக்கு, மணல் போன்ற பொருள்களை முன்கூட்டியே சேகரித்து வைத்தல் வேண்டும். நீா்நிலை புறம்போக்குகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும். நீா்நிலைகளில் தூா்வார நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சாலைகளில் உள்ள மரங்கள் கீழே விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டால் அதை சீா் செய்ய கிரேன் போன்ற வாகனங்களை தயாா் நிலையில் வைத்திருத்தல் வேண்டும்.

நகராட்சிகள்,பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகள் தொற்று நோயால் பாதிக்கப்படும் பொதுமக்கள் தங்க வைக்கப்படும் பள்ளி வளாகங்களுக்குள் கிருமி நாசினிகளை தெளிக்க வேண்டும். அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள கழிவு நீா் கால்வாய்களை தூா்வார வேண்டும்.

குடிநீா் தொட்டிகள் மற்றும் குடிநீா் தேக்கங்களை சுத்தம் செய்ய வேண்டும்.

மழைகாலங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் தடையின்றி வழங்கிடவும், புயல் மற்றும் வெள்ளம் ஏற்படும் காலங்களில் முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை பொது மக்களுக்கு உடன் தெரிவித்தல் வேண்டும். எதிா் வரும் தென்மேற்குப் பருவமழையினை அனைத்து துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகளை திறன்பட செயல்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

இதில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) காளிமுத்து, மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நோ்முக உதவியாளா் (நிலம்) சேதுராமலிங்கம், மாவட்ட வழங்கல் அலுவலா் பால்துரை, மாவட்டபிற்படுத்தப்பட்டோா் நல அலுலவா் முத்துராமலிங்கம், தனி வட்டாட்சியா் (வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத்துறை)அரவிந்த் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.